பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாமில் பிரதமரின் காணொலி வாயிலான ஆங்கில உரையின் தமிழாக்கம்

Posted On: 26 FEB 2023 12:52PM by PIB Chennai

இப்பொழுதெல்லாம் பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாம் நிகழ்வுகள் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. கடந்த பல மாதங்களாக பிஜேபி ஆளும் மாநிலங்களிலும் ஒவ்வொரு வாரமும் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை நான் காண்கிறேன். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு  பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முக்கிய தருணங்களை காணும் வாய்ப்பைப் பெற்றதில் நான் அதிர்ஷ்டசாலி. திறமையான இளைஞர்கள் அரசு இயந்திரத்திற்கு புத்தம் புதிய சிந்தனைகளை கொண்டுவந்து சிறப்பாக செயலாற்றுவதற்கு உதவி செய்கின்றனர்.

நண்பர்களே,

உத்தரப்பிரதேசத்தில் இன்று நடைபெறும் பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாமிற்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இந்த வேலைவாய்ப்பு முகாம்  9,000 குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ள அதேவேளையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாதுகாப்பிற்கு மேலும் வலுசேர்த்துள்ளது. புதிதாக பணிக்கு சேர்ந்தவர்கள் மூலம் உத்தரப்பிரதேச போலீஸ் துறை மேலும் வலிமை பெற்று சிறப்பாக செயல்படும்.  இன்று பணிநியமன ஆணைகளைப் பெற்று புதிய தொடக்கத்தையும், பொறுப்புகளையும் ஏற்றிருக்கும் இளைஞர்களுக்கு எனது இதயம் கணிந்த நல்வாழ்த்துக்கள்.  கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து 1.5 லட்சத்திற்கும் மேலாக புதிய நியமன ஆணைகள் உத்தரப் பிரதேச போலீஸ் துறையில் மட்டும் வழங்கப்பட்டிருப்பதை நான் அறிவேன்.   அதாவது பிஜேபி ஆட்சியில் வேலைவாய்ப்புகள் அதிகரித்ததோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்பெற்றுள்ளது.

நண்பர்களே,

உத்தரப்பிரதேச மாநிலம் மாஃபியாகளுக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும் பெயர் போன மாநிலமாக இருந்த காலம் உண்டு. இன்று உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை சீரடைந்துள்ளது. வளர்ச்சிப் பாதையில் செல்லும் மாநிலங்களின் வரிசையில் இதுவும் சேர்ந்துள்ளது. மக்கள் மத்தியில் பிஜேபி அரசு பாதுகாப்பு உணர்வே அதிகரித்துள்ளது. எங்கெல்லாம் சட்டம் ஒழுங்கு வலிமையாக  இருக்கிறதோ அங்கெல்லாம் அதிகளவில் வேலைவாய்ப்புகள் ஏற்படும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

வர்த்தகத்திற்கு தேவையான பாதுகாப்பு சூழல் அமையும் போது முதலீடுகள் அதிகரிக்க ஆரம்பிக்கும். இப்பொழுது எண்ணற்ற வகையில் வழிபாட்டு மையங்களும், சுற்றுலா தலங்களும் பொது மக்களுக்காக  உள்ளதை அறிவீர்கள். உத்தரப் பிரதேச மாநிலத்தில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையிலும், பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கியும் இருக்கின்றது. இங்கு சட்டம் ஒழுங்கு வலிமையாக இருக்கின்ற செய்தியானது நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சென்றடையும் போது உத்தரப்பிரதேசத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

இன்று பணி நியமன ஆணைகளைப் பெற்றிருக்கும் இளைஞர்களுக்கு சமூகத்திற்கு வழிகாட்டும் பொறுப்புடன், சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்த வேண்டும். நீங்கள் சேவையாற்றுவதுடன் மக்களுக்கு உந்துசக்தியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களது நேர்மையும், உறுதியான தீர்மானமும் சமூக விரோதிகள் மத்தியில் பய உணர்வை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாக்கி, சட்டத்தைப் பின்பற்றும் மக்களுக்கு அமைதியை ஏற்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

***

SRI/GS/AG/RR

 


(Release ID: 1903326) Visitor Counter : 148