பிரதமர் அலுவலகம்
செகந்திராபாத் நாடாளுமன்ற தொகுதியில் ஏற்பாடு செய்துள்ள “ஆரோக்கிய குழந்தை” முகாமிற்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
24 FEB 2023 11:20AM by PIB Chennai
செகந்திராபாத் நாடாளுமன்ற தொகுதியில் ஏற்பாடு செய்துள்ள “ஆரோக்கிய குழந்தை” விழிப்புணர்வு முகாமிற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி தனது ட்விட்டர் பதிவில், செகந்திராபாத் நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து பகுதியிலும் “ஆரோக்கிய குழந்தை” இயக்கத்தில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆரோக்கியமிக்க குழந்தைகளும், அவர்களுடைய பெற்றோர்களும் கெளரவிக்கப்பட்டு, சான்றிதழ்களும், ஊட்டச்சத்து தொகுப்புகளும் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
“இதுவொரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். இது குழந்தைகளுக்கு மிகப் பெரிய அளவில் நன்மை பயக்கும்”.
*****
(Release ID: 1901907)
AP/GS/RR/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1901980)
வருகையாளர் எண்ணிக்கை : 188
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam