பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் மெகா வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்

Posted On: 20 FEB 2023 11:54AM by PIB Chennai

நமஸ்காரம்!

தேவபூமியான உத்தராகண்டில் நடைபெறும் மெகா வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் இளம் நண்பர்களுக்கு எனது இதயப்பூர்வமான பாராட்டுக்கள். இன்று பணி நியமன உத்தரவுகளை பெற்றவர்களுக்கு இந்த நாள் ஒரு புதிய  தொடக்கமாகும். இது நிச்சயமாக உங்கள் மற்றும் உங்களது குடும்பத்தினரின் வாழ்க்கையை மாற்றும்.

இந்த நாளில் நீங்கள் பணிக்கு சேரவிருப்பது உங்களுடைய வாழ்க்கை மறுவடிவமைப்பு பெறுவதோடு மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான தளமாக அமையும்.  உங்களுடைய சேவைகளின் மூலம் இந்த மாநிலம் மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு உங்களது சிறந்த பங்களிப்பை வழங்கவேண்டும். இதில் பலர் கல்வித்துறையில் பணியாற்றப்போகிறீர்கள். புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் புதிய நூற்றாண்டின் இளைஞர்களை தயார்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளீர்கள். இந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் பொறுப்பு உத்தராகண்டில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ள இளைஞர்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.  

நண்பர்களே!

மத்திய அரசாகட்டும், உத்தராகண்ட் பிஜேபி அரசாகட்டும் ஒவ்வொருவரும் அவர்களின் விருப்பம் மற்றும் ஆற்றல் அடிப்படையில் அவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. அனைவரும் இந்த சரியான தளத்தைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது இந்த நடவடிக்கையின் ஒரு வழியாகும். கடந்த சில மாதங்களாக நம் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை மத்திய அரசு வழங்கிவருகிறது. நாடுமுழுவதிலும் உள்ள பிஜேபி ஆளும் மாநில அரசுகள் மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் இந்த வேலைவாய்ப்பு முகாம்  பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.  இன்று உத்தராகண்டும் இதில் இணைவதில் நான் பெருமை கொள்கிறேன்.

நண்பர்களே!

பழைய நம்பிக்கையான “மலைப்பிரதேசங்களில் தண்ணீர் மற்றும் இளைஞர் சக்தி மேன்மையடையாமலேயே போகும்” என்ற நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். இதன் ஒரு பகுதியாகவே மத்திய அரசு உத்தராகண்டைச் சேர்ந்த இளையசமுதாயத்தினருக்கு தங்கள் கிராமங்களுக்கு திரும்பி வரவேண்டும் என்பதற்காக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதற்காக மலைப்பிரதேசங்களில் புதிய வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.  இன்று பல்வேறு சாலைகள் மற்றும் ரயில்வே இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதாவது உத்தராகண்டில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.  இதன் விளைவாக தொலைதூர கிராமங்களுக்குக் கூட எளிதாக செல்லக் கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது.  மேலும், பல்வேறு வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகிறது.  கட்டுமானத் தொழில், பொறியியல், தொழில்துறைக்கான மூலப்பொருட்கள், அங்காடிகள், வேலைவாய்ப்புகள் போன்றவைகள் எங்கும் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்துத் துறையின் தேவை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய வாய்ப்புகள் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது.  முந்தைய காலகட்டத்தில் இது போன்ற வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு உத்தராகண்டைச் சேர்ந்த  எனது ஊரக இளைஞர்கள் தங்களது நகரங்களை விட்டுச் செல்லும் நிலை இருந்தது. இன்று ஒவ்வொரு கிராமங்களிலும் இணையதளம் மற்றும் டிஜிட்டல் சேவைகளைக் கொண்ட பொது சேவை மையங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

நண்பர்களே!

உத்தராகண்டின் தொலைதூர பகுதிகளை சாலை, ரயில்வே மற்றும் இணையதளம் மூலம் இணைக்கப்பட்டு வருவதன் விளைவாக சுற்றுலாத்துறை மேம்பாடு அடைந்து வருகிறது.  புதிய சுற்றுலா தலங்கள் பிரபலமடைந்து வருகிறது. இதன் விளைவாக உத்தராகண்ட் இளைஞர்கள் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலேயே வேலைவாய்ப்புகளைப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.  முன்பு அவர்கள் இந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காக தங்களது நகரங்களை விட்டு வெளியே நகரும் நிலை இருந்தது. பிரதமரின் சிறு குறு தொழில்முனைவோர் கடனுதவித் திட்டத்தின் கீழ், சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பை ஊக்குவித்து சுயதொழில் தொடங்குவதற்கு உதவிகரமாக அமைந்துள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், விற்பனை அங்காடிகள்,  உணவுக்கூடங்கள், விருந்தினர் விடுதிகள் மற்றும் தங்குமிடம் போன்ற வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் உத்தரவாதம் இல்லாமல் ரூ. 10 லட்சம் வரை கடன் பெறும் வசதி உள்ளது. இதுவரையில் நாடு முழுவதிலும் ரூ.38 கோடி மதிப்பிலான முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடன்களின் மூலம் 8 கோடி இளைஞர்கள் முதல்முறையாக தொழில்முனைவோர்  ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெண்கள், ஷெட்யூல்டு வகுப்பினர்/ பழங்குடியினர்/ இதரப்பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகும். உத்தராகண்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நண்பர்களும், இந்த வாய்ப்பினை பயன்படுத்தியுள்ளனர்.

நண்பர்களே!

இந்த சுதந்திரத்தின் விடுதலைப் பெருவிழாக் காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள இளையசமுதாயத்தினருக்கு சிறந்த வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதற்கு உங்களது சேவைகள் மூலம் தொடர்ந்து உத்வேகம் அளிக்கப்பட வேண்டும். மீண்டும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டு, உத்தராகண்ட் மக்களுக்கு சேவையாற்றுவீர்கள் என்றும் அந்த மாநிலத்தின் மேம்பாட்டிற்காக சேவை புரிவீர்கள் என்று நம்பிக்கை கொள்கின்றேன். இந்த நடவடிக்கைகள் மூலம் நமது நாடு வலிமையான திறமையான செழிப்பான நாடாக உருவாகும். மிகவும் நன்றி

-----

AP/GS/KPG/PK


(Release ID: 1900759) Visitor Counter : 181