பிரதமர் அலுவலகம்
ஏர் இந்தியா- ஏர்பஸ் கூட்டணியின் புதிய முயற்சியை முன்னிட்டு ஃபிரான்ஸ் அதிபர் மேதகு இமானுவேல் மேக்ரானுடன் காணொலி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
प्रविष्टि तिथि:
14 FEB 2023 8:36PM by PIB Chennai
ஏர் இந்தியா- ஏர்பஸ் கூட்டணியின் புதிய முயற்சியை முன்னிட்டு ஃபிரான்ஸ் அதிபர் மேதகு இமானுவேல் மேக்ரான், டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு ரிட்டன் டாட்டா, நிறுவனத்தின் வாரிய தலைவர் திரு என், சந்திரசேகரன், ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கேம்ப்பெல் வில்சன் மற்றும் ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு குலாம் ஃபாரி ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.
250 விமானங்களை ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஏர் இந்தியா கையெழுத்திட்டது. விமான போக்குவரத்து துறையில் இரண்டு மிகப்பெரிய நிறுவனங்களுக்கு இடையேயான இந்த வர்த்தக ரீதியான கூட்டணி 25 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தியா- ஃபிரான்ஸ் கேந்திர கூட்டுமுயற்சியை மேலும் வலுப்படுத்தும்.
இந்திய சிவில் விமானப் போக்குவரத்து சந்தையின் விரைவான விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி பற்றி தமது உரையின்போது பிரதமர் எடுத்துரைத்தார். இது இந்தியாவிற்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் இடையே அதிக இணைப்புக்கு வழிவகை செய்வதோடு, இந்தியாவின் சுற்றுலா மற்றும் வணிகத்தையும் ஊக்குவிக்கும் என்றார் அவர்.
இந்தியாவில் அதிக அளவில் இயங்கும் ஃபிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் குறித்து பேசி அவர், அந்நாட்டு விண்வெளி இன்ஜின் தயாரிப்பு நிறுவனமான சாஃப்ரான், இந்திய மற்றும் சர்வதேச விமான இன்ஜின்களை பராமரிக்கும் ஆலையை இந்தியாவில் நிறுவுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய அறிவிப்பை நினைவு கூர்ந்தார்.
இந்திய- ஃபிரான்ஸ் உறவுமுறையை முன்னெடுத்துச் செல்வதற்காக அதிபர் திரு மேக்ரானுக்கு பிரதமர் நன்றி தெரிவித்ததோடு இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் போது அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
***
(Release ID: 1899223)
SRI/RB/RR
(रिलीज़ आईडी: 1899329)
आगंतुक पटल : 206
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam