பிரதமர் அலுவலகம்
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் இரண்டே நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டதற்காக இந்திய அஞ்சல் துறைக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
11 FEB 2023 9:36PM by PIB Chennai
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் இரண்டே நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டதற்காக இந்திய அஞ்சல் துறைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பெண்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதிலும், அவர்களின் வளர்ச்சிக்கும் இது உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியதாவது:
“இத்தகைய மிகப்பெரிய சாதனையைப் புரிந்த இந்திய அஞ்சல் துறைக்கு நல்வாழ்த்துகள். இந்த முயற்சி, நாட்டின் திருமகள்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும், அவர்களுக்கு அதிகாரமளிக்கும்.”
***
AP / RB / DL
(வெளியீட்டு அடையாள எண்: 1898452)
வருகையாளர் எண்ணிக்கை : 214
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam