பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் “தேர்வுக்குத் தயாராகுங்கள் 2023” காணொலி நிகழ்ச்சியில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடனான கலந்துரையாடலின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 27 JAN 2023 9:06PM by PIB Chennai

வணக்கம்!

இந்தக் குளிர்காலத்தில் முதன்முறையாக “தேர்வுக்குத் தயாராகுங்கள்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. வழக்கமாக, இது பிப்ரவரி மாதத்தில் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். ஆனால் ஜனவரி 26 (குடியரசு தினம்) உங்களின் பங்களிப்பும் வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. புதுதில்லிக்கு வெளியில் இருந்து வந்தவர்கள் பங்கு கொண்டீர்களா? நீங்கள் கடமைப்பாதைக்குச் சென்றீர்களா? எப்படி இருந்தது?

நீங்கள் அதை அனுபவித்தீர்களா? நீங்கள் திரும்பி வந்ததும் உங்கள் குடும்பத்தினருக்கு என்ன சொல்வீர்கள்? அவர்களிடம் எதுவும் சொல்ல மாட்டீர்களா? நண்பர்களே, நான் அதிக நேரம் எடுக்க மாட்டேன், ஆனால் 'தேர்வுக்குத் தயாராகுங்கள்’ எனக்கும் ஒருவிதமான தேர்வு தான் என்று நான் நிச்சயமாக உங்களுக்குச் சொல்கிறேன். நாட்டில் இருந்து கோடிக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள். இதில் பங்குபெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் அதை ரசிக்கிறேன். ஏனென்றால் எனக்கு லட்சக்கணக்கில் கேள்விகள் வருகின்றன. குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்கிறார்கள்.  அவர்களின் பிரச்சினைகளைச் சொல்கிறார்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

என் நாட்டின் இளம் மாணவச் செல்வங்களின் மனம் என்ன நினைக்கிறது.  அவர்கள் கடந்து செல்லும் சிக்கல்கள், நாட்டிலிருந்து அவர்கள் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள், அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள், கனவுகள் மற்றும் தீர்மானங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்வது எனக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டமாகும். சுருக்கமாகச் சொன்னால், அது எனக்கு ஒரு பொக்கிஷம். இந்தக் கேள்விகள் அனைத்தையும் பாதுகாக்குமாறு எனது அரசின் அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். 10-15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வாய்ப்பு வந்தால், இந்த கேள்விகளை சமூக விஞ்ஞானிகளால் பகுப்பாய்வு செய்வோம்.

தலைமுறைகள் மாறும்போது, சூழ்நிலைகளும் மாறுகின்றன. செயல்பாட்டில் இளம் மாணவச் செல்வங்களின் மனதின் கனவுகள், தீர்மானங்கள் மற்றும் சிந்தனைகளும் மாறுகின்றன. நீங்கள் என்னிடம் கேள்விகள் கேட்பது போன்ற எளிமையான வடிவில் இவ்வளவு பெரிய ஆய்வறிக்கையை யாரும் கொண்டிருக்க மாட்டார்கள். அதிகம் பேசாமல் இருப்போம். நான் உடனடியாக தொடங்க விரும்புகிறேன்.  ஏனெனில் ஒவ்வொரு முறையும் இந்த நிகழ்ச்சி சற்று நீண்டதாக உள்ளது என்று எனக்கு புகார் வரும். உங்கள் கருத்து என்ன? இது நீண்ட காலம் நீடிக்குமா? அது நீண்ட காலம் நீடிக்க வேண்டுமா?

நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. உங்கள் அனைவருக்காக நான். எப்படித் தொடர வேண்டும் என்று சொல்லுங்கள். யார் முதலில் கேட்கிறீர்கள்?

இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்: நீங்கள் உலகத்தை மாற்ற விரும்பினால், உங்களை முதலில் மாற்ற கற்றுக்கொள்ளுங்கள். உலகத்தை அல்ல.

திரு பிரதமர் அவர்களே, உங்களின் ஊக்கமளிக்கும் மற்றும் தகவல் களஞ்சியமாக விளங்கும் பேச்சு எப்பொழுதும் எங்களுக்கு நேர்மறை ஆற்றலையும் நம்பிக்கையையும் ஊட்டுகிறது. உங்களின் மகத்தான அனுபவம் மற்றும் அறிவு பூர்வமான வழிகாட்டுதலை அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்.

திரு பிரதமர் அவர்களே! உங்கள் ஆசீர்வாதத்துடனும், அனுமதியுடனும் இந்த நிகழ்ச்சியைத் தொடங்க விரும்புகிறோம்.

நன்றி ஐயா.

திரு பிரதமர் அவர்களே! அஸ்வினி, வளமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலை அழகுக்கு பெயர் பெற்ற நகரமான மதுரையில் இருந்து ஒரு கேள்வி கேட்க விரும்புகிறார். அஸ்வினி, உங்கள் கேள்வியைக் கேளுங்கள்.

அஸ்வினி: திரு பிரதமர் அவர்களே! வணக்கம்!

என் பெயர் அஸ்வினி. நான் தமிழ்நாட்டின் மதுரை கேந்திரிய வித்யாலயா எண்.2ல் பயிலும் மாணவி.

உங்களுக்கு எனது கேள்வி ஐயா, எனது முடிவுகள் சரியாக இல்லாவிட்டால் எனது குடும்ப ஏமாற்றத்தை நான் எப்படி எதிர்கொள்கிறேன் என்பதுதான்.

நான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காவிட்டால் என்ன செய்வது? நல்ல மாணவராக இருப்பதும் எளிதான வேலை அல்ல. பெரியவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி, தேர்வு எழுதும் நபர் மன அழுத்தத்திற்கு ஆளாகி மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். இப்போதெல்லாம், மாணவர்கள் தங்கள் மணிக்கட்டையை வெட்டுவதும், எரிச்சலடைவதும் சகஜம். மேலும் அவர்கள் தங்கள் உணர்வுகளை நம்புவதற்கு யாரும் இல்லை. இந்த விஷயத்தில் எனக்கு வழிகாட்டுங்கள். நன்றி ஐயா.

தொகுப்பாளர்: நன்றி, அஸ்வினி.

திரு பிரதமர் ஐயா, நவ்தேஷ் ஜாகுர், இந்தியாவின் தலைநகரான தில்லியின் மையப்பகுதியிலிருந்து வந்தவர். அதன் வசீகரமான, பிரம்மாண்டமான இடைக்கால வரலாறும், அற்புதமான கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த இடமாகும். நவ்தேஷ் இந்த அரங்கத்தில் அமர்ந்து, அதே பிரச்சினையை தனது கேள்வியுடன் விவாதிக்க விரும்புகிறார்.

மேலும் புதுதில்லியைச் சேர்ந்த நவ்தேஷ், பிரியங்கா போன்றவர்களும் பிரதமரிடம் தங்களது கேள்விகளைக் கேட்டனர்.

பிரதமர்: நீங்கள் கிரிக்கெட் விளையாடுகிறீர்களா, அஸ்வினி? கிரிக்கெட்டில் கூக்லி பந்து உள்ளது.

ஒரே இலக்கு உள்ளது. ஆனால் திசை வேறு.

முதல் பந்திலேயே என்னை வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். குடும்ப உறுப்பினர்கள் உங்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருப்பது மிகவும் இயல்பானது. மேலும் அதிலும் தவறில்லை.

ஆனால் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் சமூக அந்தஸ்து காரணமாக எதிர்பார்ப்புகளுடன் இருந்தால், அது கவலைக்குரிய விஷயம். அவர்களின் சமூக அந்தஸ்து அவர்கள் மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அது அவர்களின் மனதை மிகவும் பாதிக்கிறது. அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி சமூகத்தில் மற்றவர்களிடம் என்ன சொல்வார்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் பலவீனமாக இருந்தால், அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி என்ன விவாதிப்பார்கள் என்பதைப் பற்றி அவர்கள் எப்போதும் சிந்திக்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் நண்பர்களுடன் ஒரு மன்றம் அல்லது பொதுவான இடத்தில்  அமர்ந்திருக்கும் போதோ அல்லது குளத்தின் ஓரத்தில் மற்றவர்களுடன் துணி துவைக்கும் போது தங்கள் குழந்தைகளைப் பற்றி விவாதிக்கும் போதோ குழந்தைகள் பற்றிய பிரச்சினைகள் பற்றி பேசும் போது  இது நிகழ்கிறது.

                                                                                                                                 -------

PKV/GS/KPG


(रिलीज़ आईडी: 1896256) आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Assamese , Punjabi , Gujarati , Kannada , Marathi , Telugu , Urdu , हिन्दी , Odia , Malayalam , English , Manipuri