நிதி அமைச்சகம்

“யாரையும் விட்டுவிடக்கூடாது” என்ற மந்திரத்துடன் 2014-ம் ஆண்டு முதல் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி

Posted On: 01 FEB 2023 1:33PM by PIB Chennai

2014 முதல் நாட்டின் சாதனைகளை எடுத்துரைத்த மத்திய நிதியமைச்சர், திருமதி நிர்மலா சீதாராமன், 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமர்பிக்கும்போது, ​​“யாரையும் விட்டுவிடக்கூடாது என்ற மந்திரத்தை வலியுறுத்தினார். இது அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் கண்ணியமான வாழ்க்கையையும் உறுதி செய்துள்ளது என்று அவர் கூறினார்.

2014 ஆம் ஆண்டிலிருந்து அரசின் எண்ணற்ற சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், தனிநபர் வருமானம்  கடந்த 9 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்து ரூ. 1.97 லட்சம் ஆக இருந்தது என்றார்.

மேலும், கடந்த ஒன்பது 9 ஆண்டுகளில், இந்தியப் பொருளாதாரம், உலகில் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியது. "பல உலகளாவிய குறியீடுகளில் பிரதிபலிக்கும் வகையில் வணிகத்திற்கான சாதகமான சூழலைக் கொண்ட ஒரு நல்லாட்சியால் நாட்டின்  நிலை கணிசமாக மேம்பாடு அடைந்துள்ளது,  மேலும் பல நிலையான வளர்ச்சி இலக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும்  அடைந்துள்ளது” என அவர் கூறினார்.

பொருளாதாரம் மிகவும் முறைப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட மத்திய நிதியமைச்சர், இது  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி  அமைப்பு (இபிஎப்ஓ) ​​உறுப்பினர் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்து 27 கோடியாக உள்ளது என்றார். 2022-ல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 7,400 கோடியாக அதிகரித்து, ரூ.126 லட்சம் கோடி  அளவுக்கு  பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

***

(Release ID: 1895312)

PKV/AG/RR



(Release ID: 1895709) Visitor Counter : 184