நிதி அமைச்சகம்
முற்றிலும் சுற்றுலாத் தொகுப்பாக 50 இடங்கள் மேம்படுத்தப்படும்
प्रविष्टि तिथि:
01 FEB 2023 1:06PM by PIB Chennai
நாட்டில் குறைந்தது 50 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முற்றிலும் சுற்றுலாத் தொகுப்பாக மேம்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட் 2023-24-ஐ நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்த மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்த சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு, உணவு, சுற்றுலா வழிகாட்டி, போக்குவரத்து தொடர்பாக சுற்றுலாத் தலங்களின் விவரங்களை தெரிவிக்க, செயலியை தொடங்குமாறு நிதியமைச்சர் பரிந்துரைத்தார்.
எல்லைப்புற கிராமங்களின் சுற்றுலாவை மேம்படுத்த, சுற்றுலா உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் உத்வேக கிராமத்திட்டத்தின் கீழ், செய்து தரப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
மாநில தலைநகரங்களில் ஒருங்கிணைந்த பெரு வணிக வளாகங்கள் அமைக்கப்படும். இதன்மூலம், மாநிலங்களின் ஒரு மாவட்டம், ஒரு பொருள் தயாரிப்பு, புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், இதர கைவினைப்பொருட்கள் ஆகியவற்றை ஊக்குவிக்க முடியும் என்று கூறினார்.
----------
(Release ID: 1895293)
IR/RS/RR
(रिलीज़ आईडी: 1895671)
आगंतुक पटल : 308
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Urdu
,
Manipuri
,
English
,
हिन्दी
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Bengali
,
Telugu
,
Malayalam