நிதி அமைச்சகம்

கடந்த பத்தாண்டுகளில் சராசரி வருடாந்திர வனப் பகுதி அதிகரிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது: பொருளாதார ஆய்வு அறிக்கை 2022-23

Posted On: 31 JAN 2023 1:18PM by PIB Chennai

தூய்மையான எரிசக்தி மாற்றங்களைக் கையாளும் உலக நாடுகளின் வரிசையில்  இந்தியா முன்னணியில் உள்ளதுடன், பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டில் உறுதியாக உள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று  தாக்கல் செய்யப்பட்ட  பொருளாதார ஆய்வு அறிக்கை 2022-23, வறுமை ஒழிப்பு மற்றும் அடிப்படை நலவாழ்வுக்கு  உத்தரவாதம் அளிக்கும் இலக்குகளை முன்னிறுத்தி அதன் வளர்ச்சிக்கான பார்வையுடன் இந்தியா ஒருங்கிணைந்து செயல்படுவதை எடுத்துக்காட்டுகிறது.

 

பருவநிலை நடவடிக்கையில் முன்னேற்றம்

இந்தியா தனது வளர்ச்சி இலக்குகளை லட்சிய காலநிலை நடவடிக்கை இலக்குகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

2010 மற்றும் 2020 க்கு இடையில் சராசரி ஆண்டு வனப் பகுதியில் நிகர ஆதாயத்தைப் பொறுத்து உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. பசுமை இந்தியா இயக்கம், இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை போன்ற தேசிய மற்றும் மாநில அரசாங்கங்களின் வலுவான கட்டமைப்பு மற்றும் கொள்கைகளால் இது சாத்தியமானது.

சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தியாவில் இப்போது 13.3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் ஈரநிலங்களுக்கான 75 ராம்சார் தளங்கள் உள்ளன. சதுப்புநிலப் பரப்பில் 364 சதுர கி.மீ அதிகரிப்பையும் பொருளாதார ஆய்வு அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தியா படிப்படியாக புதுப்பிக்கத்தக்க முதலீடுகளுக்கு விருப்பமான இடமாக மாறி வருகிறது. 2014 - 2021 காலகட்டத்தில், இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின்  மொத்த முதலீடு 78.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

 2029-30 ஆம் ஆண்டின் இறுதியில் நிறுவப்பட்ட திறன் 800 ஜிகாவாட்டிற்கும் அதிகமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது, இதில் புதைபடிமமமற்ற எரிபொருள் 500 ஜிகாவாட்டிற்கும் அதிகமாக பங்களிக்கும், இதன் விளைவாக சராசரியாக உமிழ்வு விகிதம் 29 ஆக குறைகிறது.

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம், இந்தியாவை எரிசக்தியில் சுதந்திர நாடாக மாற்றுவதற்கும், முக்கியமான துறைகளை கார்பனேற்றம் செய்வதற்கும் ரூ 19,744 கோடி செலவில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன் பற்றியும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

***

AP/PKV/KRS

 



(Release ID: 1895026) Visitor Counter : 178