பிரதமர் அலுவலகம்
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
நமது நாட்டிற்காக தியாகம் செய்த அனைவருக்கும் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 JAN 2023 9:08AM by PIB Chennai
மகாத்மா காந்தியின் நினைவுநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தி, அவரது ஆழ்ந்த சிந்தனைகளை நினைவுகூர்ந்துள்ளார். அத்துடன் நமது நாட்டிற்காக தியாகம் செய்த அனைவருக்கும் திரு மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“நான் பாபுவின் நினைவு நாளில் அவரை வணங்குகிறேன், அவரது ஆழ்ந்த சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். நமது நாட்டுக்கான சேவையில் தியாகம் செய்த அனைவருக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். அவர்களின் தியாகங்கள் ஒருபோதும் மறக்கப்படாது, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க உழைக்க வேண்டும் என்ற நமது உறுதியை அவை வலுப்படுத்தும்.”
***
(Release ID: 1894566)
IR/SMB/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1894642)
வருகையாளர் எண்ணிக்கை : 224
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam