பிரதமர் அலுவலகம்
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 11 கோடி குடிநீர் குழாய் இணைப்புகள் என்னும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதற்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
25 JAN 2023 11:51AM by PIB Chennai
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 11 கோடி குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் பயனடைந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள திரு மோடி, இதனை வெற்றிகரமான இயக்கமாக மாற்றும் வகையில், களப்பணி ஆற்றிய அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்டுள்ள ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:
“இந்திய மக்களுக்கு வீடுதோறும் குடிநீர் என்பதை உறுதி செய்துள்ள களப்பணி மிகப்பெரிய சாதனையாகும். இந்த முன்முயற்சி மூலம் பயனடைந்தவர்களுக்கு வாழ்த்துக்கள். இதனை வெற்றிகரமான இயக்கமாக மாற்றிய களப்பணியாளர்களுக்கு பாராட்டுக்கள்”
***
(Release ID: 1893496)
AP/PKV/RS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1893560)
வருகையாளர் எண்ணிக்கை : 197
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu
,
Assamese
,
English
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam