பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இமாச்சலப் பிரதேச மாநில தினத்தையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

Posted On: 25 JAN 2023 10:04AM by PIB Chennai

இமாச்சலப் பிரதேச மாநில தினத்தையொட்டி, அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

‘இமாச்சாலப் பிரதேச மாநில தினத்தையொட்டி அம்மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள். இம்மாநிலத்தின் கடின உழைப்பாளிகளான மக்கள், இயற்கை எழிலுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்போதும் நாட்டின் சேவைக்காக,  தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்கள். வரும் காலத்தில் அவர்கள் வெற்றியின் புதிய உச்சங்களை எட்டவேண்டும் என்பது எனது விருப்பமாகும்.”


(Release ID: 1893441)

PKV/RS/RR

***(Release ID: 1893495) Visitor Counter : 62