இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இளைஞர் 20குழுவின் முதலாவது கூட்டம் குவஹாத்தியில் பிப்ரவரி 6 முதல் 8 வரை நடைபெறுகிறது
Posted On:
22 JAN 2023 2:06PM by PIB Chennai
ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி இந்தியா முதன்முறையாக இளைஞர் (ஒய்20) உச்சிமாநாட்டை நடத்துவதால், ஒய்20 குழுவின் முதல் கூட்டம் 2023 பிப்ரவரி 6 முதல் 8 வரை குவஹாத்தியில் நடைபெறும். 2023 ஆகஸ்ட் மாதம் நடைபெறும் இறுதி இளைஞர்-20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இந்தியா முழுவதும் ஐந்து ஒய்20 கருப்பொருட்களில் களில் நடத்தப்படும் பல்வேறு சந்திப்புகளில் இதுவே முதலாவதாகும். அசாமில் நடைபெறும் 3 நாள் நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலுமிருந்து 250க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இது, பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு; சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கம்; ஜனநாயகம் மற்றும் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் விளையாட்டுகளில் இளைஞர்கள் என்ற எதிர்காலப் பணியின் ஐந்து கருப்பொருள்களில் கவனம் செலுத்தும்.
2023, பிப்ரவரி 7 அன்று ஐஐடி-குவஹாத்தியில் நடைபெறும் மத்திய நிகழ்வில், பல்வேறு பல்கலைக்கழகங்கள் /கல்லூரிகளின் போட்டிகளில் பரிசு வென்றவர்கள் உட்பட 400 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வார்கள, புதுமைகள் மற்றும் தொழில்துறை-கல்வித் தொடர்பைப் புரிந்துகொள்வதற்கு வழிகாட்டப்படுவார்கள். பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான யோசனைகளைப் பரிமாறிக் கொள்வதற்காக சர்வதேச இளைஞர் பிரதிநிதிகளுடன் உரையாடுவதற்கான வாய்ப்பையும் அவர்கள் பெறுவார்கள்.
*****
SMB / DL
(Release ID: 1892834)
Visitor Counter : 186