பிரதமர் அலுவலகம்
2022 டிசம்பர் மாதத்தில் ரூ. 12.8 லட்சம் கோடி மதிப்பில் 782 கோடி யு.பி.ஐ பரிவர்த்தனைகள் என்ற சாதனையை இந்தியா எட்டியுள்ள நிலையில், யு.பி.ஐ கட்டணமுறை பிரபலமடைந்து வருவதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
Posted On:
02 JAN 2023 9:31PM by PIB Chennai
2022 டிசம்பர் மாதத்தில் ரூ. 12.8 லட்சம் கோடி மதிப்பில் 782 கோடி யு.பி.ஐ பரிவர்த்தனைகள் என்ற மாபெரும் சாதனையை இந்தியா எட்டியுள்ள நிலையில், டிஜிட்டல் கட்டணமுறையை பரவலாக்கியதற்காக இந்திய மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நிதி தொழில்நுட்ப வல்லுநரின் தொடர் ட்விட்டர் செய்திகளைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“யு.பி.ஐ கட்டணமுறையின் புகழை உயர்த்துவதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளை வரவேற்கிறேன். டிஜிட்டல் கட்டணமுறைகளை தேர்ந்தெடுத்ததற்காக சக இந்தியர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளுக்கான குறிப்பிடத்தக்க தகவமைப்புத் திறனை இவை உணர்த்தியுள்ளன.”
***
(Release ID: 1888153)
RB/SMB/RR
(Release ID: 1888184)
Visitor Counter : 157
Read this release in:
Kannada
,
Assamese
,
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam