பிரதமர் அலுவலகம்
இந்திய ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
Posted On:
29 DEC 2022 6:31PM by PIB Chennai
இந்திய ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இருதரப்புக்கும் இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்புக்கு இது முக்கியமான தருணம் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பனீஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்திய ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இருதரப்புக்கும் இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்புக்கு இது முக்கியமான தருணம் இதுவாகும். இந்த ஒப்பந்தம் இது நமது வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பிணைப்பில் திறன்களை மகத்தான முறையில் அதிகரிப்பதுடன் இருதரப்பு வணிகங்களையும் வலுப்படுத்தும். உங்களை இந்தியாவில் விரைவில் உங்களை வரவேற்கும் தருணத்தை எதிர்நோக்கி இருக்கிறேன்”.
இவ்வாறு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1887356
***********
AP/PLM/RJ/KRS
(Release ID: 1887378)
Visitor Counter : 182
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam