பிரதமர் அலுவலகம்

குரு தேஜ்பகதூரின் நினைவு தினத்தில் பிரதமர் அஞ்சலி

Posted On: 28 NOV 2022 11:34AM by PIB Chennai

குரு தேஜ்பகதூர் தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

குரு தேஜ்பகதூர் ஜி-யின்  தியாக தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது வீரம், கொள்கைகள் மற்றும்   லட்சியத்தில் அசைக்கமுடியாத அர்ப்பணிப்புக்காக அவர் அனைவராலும் போற்றப்படுகிறார். கொடுங்கோன்மைக்கும், அநீதிக்கும், அவர் தலைவணங்க மறுத்தார். அவரது போதனைகள் நம்மை  தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டிருக்கும்.

------

(Release ID: 1879458)

AP/PKV/KPG/KRS(Release ID: 1879474) Visitor Counter : 174