எரிசக்தி அமைச்சகம்

மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மினி ரத்னா பொதுத்துறை நிறுவனமான நீப்கோ லிமிட்டெட் மூலம் செயல்படுத்தப்பட்ட 600 மெகாவாட் திறன் கொண்ட கமெங் புனல் மின் நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

Posted On: 19 NOV 2022 12:59PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அருணாச்சலப் பிரதேசத்தில் 600 மெகாவாட் திறன் கொண்ட கமெங் புனல் மின் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள மினி ரத்னா பொதுத்துறை நிறுவனமான நீப்கோ லிமிட்டெட் (வடகிழக்கு மின்சார கழகம்) மூலம் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய புனல் மின் திட்டமாகும்.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், மத்திய மின்சாரத்துறை அமைச்சர் திரு  ஆர்.கே. சிங், பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், கமெங் புனல் மின் திட்டம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், தீவிர கவனம் செலுத்தி வந்தார்.  தூய்மையான எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கும், அருணாச்சலப் பிரதேசத்தில் செழிப்பைக் கொண்டுவருவதற்கும் இத்திட்டம் பெரும் பயன் அளிக்கும். வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடிய இத்திட்டத்துக்கு அமைச்சர் அதிக முன்னுரிமை அளித்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் சுமார் 8200 கோடி ரூபாய் செலவில் 80 கிலோமீட்டர்களுக்கு மேல் இந்த திட்டம் நீண்டுள்ளது.

இத்திட்டத்தில் 3353 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய 150 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் கொண்ட இரண்டு அணைகள் மற்றும் ஒரு மின் நிலையம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 3353 மில்லியன் யூனிட்களை உருவாக்குவது அருணாச்சலப் பிரதேசத்தை மின் உபரி மாநிலமாக மாற்றும்.

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான உள்கட்டமைப்பு திட்டங்கள் கோவிட்-19 பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மெகா திட்டம் நீப்கோ  மூலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, அருணாச்சல பிரதேச ஆளுநர் பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

 

*********

MSV/PKV/DL



(Release ID: 1877311) Visitor Counter : 178