பிரதமர் அலுவலகம்
பாலியில் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி மாங்குரோவ் காடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2022 10:12AM by PIB Chennai
பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிற ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் 'டமான் ஹுட்டான் ராய என்குரா ராய்' என்னுமிடத்தில் உள்ள மாங்குரோவ் காடுகளுக்கு பயணம் செய்து பார்வையிட்டார்.
மாங்குரோவ் தாவரங்கள் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜி-20 தலைமைப் பொறுப்பில் இந்தோனேசியா இருந்தபோது, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டு முன்முயற்சியான பருவநிலைக்கான மாங்குரோவ் கூட்டணியில் இந்தியா சேர்ந்துள்ளது.
இந்தியாவின் 5000 சதுரகிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் 50-க்கும் அதிகமாக மாங்குரோவ் வகைகள் இருப்பதை காணலாம். காற்றில் உள்ள கார்பனை உறிஞ்சும் திறனும், செழுமையான பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் தன்மையும் கொண்ட மாங்குரோவ் காடுகளை பாதுகாத்து, மறுசீரமைப்பதை இந்தியா வலியுறுத்தி வருகிறது.
**********
(Release ID: 1876310)
PKV/KG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1876318)
வருகையாளர் எண்ணிக்கை : 204
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam