பிரதமர் அலுவலகம்
பிரபல தமிழ் எழுத்தாளர் திரு அழ.வள்ளியப்பாவின் நூற்றாண்டு பிறந்த நாளில் பிரதமர் மரியாதை
Posted On:
07 NOV 2022 10:55AM by PIB Chennai
பிரபல தமிழ் எழுத்தாளர் திரு அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டு பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“திரு அழ.வள்ளியப்பாவின் நூறாவது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது சிறந்த எழுத்து மற்றும் கவிதைகளுக்காக மட்டுமல்லாமல், வரலாறு, கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தை குழந்தைகளிடையே பிரபலப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் அவர் நினைவுகூரப்படுகிறார். அவரது முயற்சிகள் இன்றைய காலத்திலும் தொடர்ந்து பலரை ஊக்குவிக்கிறது."
**************
(Release ID: 1874172)
PKV/SMB/RR
(Release ID: 1874179)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam