உள்துறை அமைச்சகம்

2022-ஆம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சரின், “சிறந்த செயல்பாட்டுக்கான பதக்கம்” 4 சிறப்பு செயல்பாடுகளுக்காக வழங்கப்பட்டது

Posted On: 31 OCT 2022 11:30AM by PIB Chennai

2022-ஆம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் “சிறந்த செயல்பாடுகளுக்கான பதக்கம்” 4 சிறந்த நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. நாடு/மாநிலம்/யூனியன் பிரதேசங்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்தல், நாட்டின் முக்கியப் பிரிவுகளில் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க தாக்கம், சிறந்த திட்டமிடல் உள்ளிட்ட செயல்களை அங்கீகரிக்கும் விதமாக 2018-ஆம் ஆண்டு இந்த பதக்கம் உருவாக்கப்பட்டது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை, ஆயுதங்களை கட்டுப்படுத்துதல், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆகியவற்றில் சிறந்த செயல்பாடுகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி அறிவிக்கப்படும். ஓராண்டின் 3 சிறந்த செயல்பாடுகள் விருதுக்காக பரிந்துரைக்கப்படும். மேலும், அசாதாரண சூழல்களில் மாநிலம்/யூனியன் பிரதேசங்களின் காவல்துறையை ஊக்குவிப்பதற்காக 5 சிறப்பு விருதுகள் வழங்கப்படும்.    

**************

Release ID: 1872162

SM/KG/KRS



(Release ID: 1872210) Visitor Counter : 167