பிரதமர் அலுவலகம்

மத்தியப் பிரதேசத்தில் பிரதமரின் வீட்டு வசதித் (ஊரகம்) திட்டத்தின் கீழ் 4.5 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் ‘கிரஹ பிரவேசம்’ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

Posted On: 22 OCT 2022 5:40PM by PIB Chennai

3.5 கோடி குடும்பங்களின் மிகப்பெரிய கனவுகளை நிறைவேற்றுவது நமது அரசின் பெரும் பாக்கியம்.

"இன்றைய புதிய இந்தியாவில், ஏழை மக்கள் தங்கள் புதிய வீடுகளில் தந்தேராஸ் அன்று ‘புதுமனையில் குடிபெயர்கின்றனர்"

"அரசின் பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் முழுமை அடைந்துள்ளது"

“பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு கருவியாக மாறியுள்ளது"

"தலைமுறையினரைத் துன்புறுத்திய வீடற்ற தன்மையின் தீய சுழற்சியை நாம் உடைக்கிறோம்"

"இப்போது அடிப்படை வசதிகளைப் பெற்ற ஏழை மக்கள், தங்கள் வறுமையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள்"

"ரேவாரி கலாச்சாரத்திலிருந்து நாட்டை விடுவிக்க நாட்டின் பெரும் பகுதியினர் தயாராகி வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்"

தந்தேராஸ் (தீபாவளி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக லக்ஷ்மி பூஜை) விழாவையொட்டி, மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் உள்ள பிரதமரின் வீட்டு வசதித் (ஊரகம்) திட்டத்தின் - கீழ் சுமார் 4.51 லட்சம் பயனாளிகளின் ‘கிரஹ பிரவேசம்’ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம்  பங்கேற்றார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தந்தேராஸ் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

”மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 4.50 லட்சம் சகோதர சகோதரிகளுக்கு இன்று புதிய ஆரம்பம், அவர்கள் புதிய  வீடுகளில் ‘கிரஹ பிரவேசம்’ செய்கிறார்கள்.

கார்கள் அல்லது வீடுகள் போன்ற விலையுயர்ந்த சொத்துக்களை வாங்குவதன் மூலம் சமூகத்தின் செல்வந்தர்களால் மட்டுமே தந்தேராஸ்  கொண்டாடப்பட்ட காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர், தந்தேராஸ் பணக்காரர்களுக்கு மட்டுமே பண்டிகையாக இருந்தது என்று கூறினார்.

ஏழைகள் தங்களின் புதிய வீடுகளில் தந்தேராஸ் அன்று ‘கிரஹ பிரவேசம்’ செய்வது இன்றைய புதிய இந்தியா என்று பிரதமர் குறிப்பிட்டார்.

குறிப்பாக இன்று வீட்டு உரிமையாளர்களாக மாறியுள்ள பெண்களுக்கு திரு மோடி வாழ்த்து தெரிவித்தார். இன்று வீடுகளைப் பெறும் மக்களிடம் உள்ள சாத்தியக்கூறுகளை தன்னால் பார்க்க முடிகிறது என்று பிரதமர் கூறினார்.

இன்று புதிய வீட்டில் ‘கிரஹ பிரவேசம்’ செய்யும் நாள் மட்டும் அல்ல, இது புதிய மகிழ்ச்சி, புதிய தீர்மானங்கள், புதிய கனவுகள், புதிய ஆற்றல் மற்றும் புதிய தலை விதியைக் குறிக்கிறது.

3.5 கோடி குடும்பங்களின் மிகப்பெரிய கனவுகளை நனவாக்குவது நமது அரசின் பெரும் பாக்கியம் என்று அவர் கூறினார். புதிய வீடுகளில் அமைந்துள்ள வசதிகளை எடுத்துரைத்த பிரதமர், அரசு ஏழைகளின் நலனுக்காகவும், அவர்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் இருப்பதாலும், ஏழைகளின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் புரிந்துகொள்வதாலும், அரசால் கட்டப்படும் வீடுகளில் கழிப்பறை, மின்சாரம், தண்ணீர் இணைப்பு, எரிவாயு இணைப்பு ஆகியவை உள்ளன.

 

அரசின் பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் முழுமை அடைந்துள்ளது.

 

வீடுகள் வழங்கப்பட்டால், தனித்தனியாக கழிப்பறைகள் கட்ட வேண்டும் என்றும், வீடுகளில் மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு இணைப்புகளைப் பெறுவதற்கு வீட்டு உரிமையாளர்கள் வெவ்வேறு அரசு அலுவலகங்களுக்கு 

நடையாய், நடக்க வேண்டும் என்றும் முந்தைய அரசுகளின் செயல்பாட்டினை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

வீட்டு உரிமையாளர்கள் பல சந்தர்ப்பங்களில் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

 

வீடுகளை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளில்

முந்தைய அரசுகள் கடுமையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளால் மிகுந்த சிரமத்திற்கு ஆளான வீட்டு உரிமையாளர்களின் ஆசைகள் மற்றும் விருப்பங்களுக்கு கவனம் செலுத்தப்படவில்லை என்று கூறினார்.

"நாங்கள் வழிமுறைகளை மாற்றிவிட்டோம், மேலும் வீட்டு உரிமையாளர்களுக்கு முழுமையான கட்டுப்பாட்டை வழங்கினோம்" என்று பிரதமர் கூறினார்.

இந்தக் கட்டுப்பாட்டின் காரணமாக, பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், தற்போது சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு கருவியாக மாறியுள்ளது என்று பிரதமர் விளக்கினார். கடந்த கால மோசமான கொள்கைகள் காரணமாக, அடுத்த தலைமுறைக்கும் வீடற்ற நிலையை ஏற்படுத்தும் நிலையில் மக்கள் இருந்தனர் என்று பிரதமர் கூறினார்.

"இந்த தீய சுழற்சியில் இருந்து கோடிக்கணக்கான நமது மக்களை வெளிக்கொண்டு வரும் வாய்ப்பை பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன்" என்று பிரதமர் கூறினார்.

மத்தியப் பிரதேசத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 9 முதல் 10 லட்சம் வீடுகள் கட்டப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த லட்சக்கணக்கான கட்டுமானங்கள் மூலம் வேலைவாய்ப்புக்கான புதிய பல பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குகின்றன, என்றார்.

 

மத்தியப் பிரதேசத்தில் மட்டும் இந்த வீடுகள் கட்ட ரூ 22,000 கோடி செலவிடப்பட்டது என்றும், இந்த மிகப்பெரிய மூலதனம் மாநிலத்தின் பொருளாதார வாழ்க்கையின் அனைத்து அம்சங்களுக்கும் உதவியது என்றும் அவர் தெரிவித்தார்.

"இந்த வீடுகள் அனைவருக்கும் முன்னேற்றத்தைக் கொண்டு வருகின்றன" என்று அவர் மேலும் கூறினார்.

 

மாற்றம் கண்டுள்ள  பணி கலாச்சாரம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், முந்தைய காலங்களில், பொதுமக்கள் அரசை அணுகி வசதிகளை பெறும் நிலை இருந்தது  என்ற கூறிய பிரதமர், தற்போதைய அரசு  பொது மக்களிடம் சென்று திட்டங்களின் அனைத்து நன்மைகளையும் கொண்டு சேர்ப்பது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்றார்..

 

"இன்று நாங்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் திட்டங்களின் நிலையைப் பற்றி பேசுகிறோம்.", அவர் மேலும் கூறினார். மக்களின் இந்த அடிப்படைத் தேவைகள் குறித்து அரசு காட்டும் அவசரம் குறித்துப் பேசிய பிரதமர், இதற்கு கடந்த காலத்தின் படிப்பினைகளே காரணம் என்றார்.

கடந்த காலங்களில், மக்கள் இந்த அடிப்படை வசதிகளை இழந்தனர், அவர்களுக்கு வேறு எதையும் பற்றி சிந்திக்க நேரமில்லை.

"அதனால்தான் "கரீபி ஹடாவோ"வின் அனைத்து முழக்கங்களும் பயனற்றதாகவே இருந்தது.

“அதனால்தான் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் இந்த அடிப்படை வசதிகளுடன் விரைவாக இணைக்க முடிவு செய்தோம்.

இப்போது அடிப்படை வசதிகளுடன் கூடிய ஏழைகள் தங்கள் ஏழ்மையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்” என்று அவர் விரிவாகக் கூறினார். நோய் தொற்றின் போது 80 கோடி மக்களுக்கு அரசு இலவச ரேஷன் வழங்கியதாகவும், இதற்காக ரூ 3 லட்சம் கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டதாகவும்  அவர் கூறினார்.

பிரதமர், “வரி செலுத்துவோர் தங்களது பணம் சரியான நோக்கத்திற்காக செலவிடப்படுவதாக உணரும்போது, அவரும் மகிழ்ச்சியடைகிறார். இன்று, நாட்டில் உள்ள கோடிக்கணக்கான வரி செலுத்துவோர், கொரொனா காலத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்க உதவியதை எண்ணி அவர்கள் திருப்தி அடைந்துள்ளனர்.

இதே வரி செலுத்துபவர் தன்னிடம் வசூலித்த பணத்தில் இலவச ‘ரேவாரி’ (இலவசங்கள்) விநியோகம் செய்யப்படுவதைப் பார்க்கும்போது, அவர்களும் வேதனை அடைகின்றனர்.

இன்று இதுபோன்ற வரி செலுத்துவோர் எனக்கு வெளிப்படையாகக் கடிதம் எழுதுகிறார்கள்.

நாட்டின் பெரும் பகுதியினர் ரேவாரி கலாச்சாரத்திலிருந்து நாட்டை விடுவிக்க தயாராகி வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

 

அரசாங்கத்தின்  நோக்கம் அதன் குடிமக்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றுவது மட்டுமல்ல, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் பிரிவினரின் செலவினங்களைக் குறைக்க முயற்சிப்பதும் ஆகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, ஏழைப் பொருளாதாரப் பின்னணியில் உள்ள நான்கு கோடி நோயாளிகள் இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை சிகிச்சை பெற்றுள்ளனர் என்று பிரதமர் தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் இலவச தடுப்பூசி பிரச்சாரத் திட்டத்திற்காக அரசு ஆயிரக்கணக்கான கோடிகளை செலவிட்டதாகவும், ஏழைகள் தங்கள் சொந்த பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுப்பதை தடுத்ததாகவும் அவர் கூறினார்.

 

உக்ரைன்  போரினால் உரங்களின் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், விவசாயிகள் மேல் சுமையை ஏற்றாமல், இந்த ஆண்டு கூடுதலாக ரூ 2 லட்சம் கோடி செலவிட உள்ளதாக பிரதமர் அடிக்கோடிட்டுக் கூறினார்.

"மத்திய அரசின் பிரதமர் கிசான் சம்மான் நிதியும் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது" என்று பிரதமர் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ரூ 16 ஆயிரம் கோடி தவணை தொகை உடனடியாக ஒவ்வொரு பயனாளி விவசாயிகளுக்கும் சென்றடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

"இப்போது", என்று கூறிய பிரதமர், "நமது அரசு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்துள்ளது.

மேலும் பயிர் விதைக்கும் பருவ காலம் என்பதால் விவசாயிகளுக்கு உரம் மற்றும் மருந்துகளுக்கு பணம் தேவைப்படும் போது இந்த உதவி வந்துள்ளது.

மேலும், பயிர்களை விற்ற பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மேலும் கூறுகையில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் பணமும் நேரடியாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மிகவும் சத்தான உணவு தேவைப்படும்போது அவர்களுக்கு உதவும் பொருட்டு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் அவர்களைச் சென்றடைகிறது.

சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வு மற்றும் அரசியல் விருப்பத்தால் இவை அனைத்தும்  சாத்தியமாகின்றன.  சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்துவதையும் பிரதமர் தொடுத்தார்.

ஸ்வமித்வா திட்டத்திலும், விவசாயத்திலும் ஆவண  பதிவுகளை ஆய்வு செய்வதில் ட்ரோனின் பங்களிப்பை அவர் குறிப்பிட்டார்.

லட்சக்கணக்கான உரக்கடைகளை கிசான் சம்ரித்தி கேந்திராக்களாக மாற்றும் சமீபத்திய நடவடிக்கைகளை நினைவுகூர்ந்த அவர், நாடு முழுவதும் யூரியாவின் பொதுவான பிராண்டான பாரத் பிராண்டை அறிமுகப்படுத்தினார், மேலும் இந்த நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு உதவும் என்று நம்புகிறார்.

 

பின்னணி

 

 

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய வீட்டை வழங்குவது என்பது பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியாகும்.

இன்றைய நிகழ்வு இந்த திசையில் மற்றொரு படி நிலையை குறிக்கிறது.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தில் இதுவரை சுமார் 38 லட்சம் வீடுகளை கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளன. ரூ. 35,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் சுமார் 29 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.

 

*************



(Release ID: 1870323) Visitor Counter : 180