பிரதமர் அலுவலகம்

நாற்கர கூட்டமைப்பு தலைவர்களின் முதலாவது காணொலி மாநாட்டில் பிரதமர் தெரிவித்த தொடக்க கருத்துக்கள்

Posted On: 12 MAR 2021 1:28PM by PIB Chennai

மேதகு தலைவர்களே,

அதிபர் பைடன்,

பிரதமர் மோரிசன்,

பிரதமர் சுகா அவர்களே, நாம் நண்பர்களாக இருப்பது சிறப்புவாய்ந்தது!

இந்த முயற்சிக்காக அதிபர் பைடனுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேதகு தலைவர்களே,

நமது ஜனநாயக பண்புகள் மற்றும் வெளிப்படையான, திறந்த, அனைவருக்குமான இந்தோ-பசிபிக் பிராந்தியம் என்ற நமது உறுதிப்பாடு ஆகியவற்றின்மூலம் நாம் இணைந்துள்ளோம்.

நமது கூட்டத்தின் இன்றைய கருத்துருவான தடுப்பூசி, பருவநிலை மாற்றம், வளரும் தொழில்நுட்பம் போன்ற பகுதிகள், சர்வதேச நலனுக்கான சக்தியாக குவாட் அமைப்பை மாற்றியுள்ளது.

அனைவரும் ஒரே குடும்பம் என்ற இந்தியாவின் பழமையான தத்துவத்தின் விரிவாக்கமாகவே இந்த நேர்மறையான இலக்கை நான் பார்க்கிறேன்.
 

நமது ஒரே மாதிரியான செயல்பாடுகளை மேம்படுத்தவும், பாதுகாப்பான, நிலையான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பகுதியை ஊக்குவிக்கவும், இதற்கு முன்பு இருந்ததைவிட மிகவும் நெருக்கமாக நாம் இணைந்து பணியாற்றுவோம்.

குவாட் அமைப்பை இந்த காலத்துக்கானது என்பதை இன்றைய மாநாடு வெளிப்படுத்துகிறது.

பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு முக்கிய தூணாக இது தொடர்ந்து நீடிக்கும்.

அனைவருக்கும் நன்றி.

**************

(Release ID: 1867669)



(Release ID: 1868436) Visitor Counter : 114