பிரதமர் அலுவலகம்
இந்தியா-ஸ்வீடன் இடையேயான காணொலி மாநாட்டில் பிரதமர் தெரிவித்த தொடக்க கருத்துக்கள்
Posted On:
05 MAR 2021 1:16PM by PIB Chennai
முக்கியத்துவம் வாய்ந்தவர்களுக்கு வணக்கம்!
இந்தியா-நோர்டிக் நாடுகள் இடையேயான முதலாவது மாநாட்டை 2018-ம் ஆண்டில் ஸ்வீடன் நடத்தியது. அந்த நேரத்தில், ஸ்டாக்ஹோம் நகருக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை நான் பெற்றேன். இரண்டாவது இந்தியா-நோர்டிக் நாடுகள் மாநாட்டில் விரைவில் மீண்டும் சந்திப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். மன்னரும், ராணியும் 2019-ம் ஆண்டில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறோம்.
முக்கியத்துவம் வாய்ந்தவர்களே,
பாரிஸ் உடன்படிக்கையில் அளித்த எங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நாங்கள் வேகமாக முன்னேறி வருகிறோம். நாங்கள் இலக்கை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், அதனைத் தாண்டியும் செயல்பட்டுள்ளோம். ஜி20 நாடுகளில், இந்தியா மட்டுமே தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நல்ல முன்னேற்றம் பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எங்களது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன், 162%-ஆக உயர்ந்துள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் அளவுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி கட்டமைப்பை ஏற்படுத்த நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். எல்இடி விளக்குகளின் பயன்பாட்டை ஊக்குவித்ததன்மூலம், கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தின் அளவை 3 கோடி டன் அளவுக்கு குறைத்துள்ளோம். சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பில் இணைவதாக ஸ்வீடன் வெளியிட்ட அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். பேரிடரை எதிர்கொள்வதற்கான கட்டமைப்புக்கான கூட்டமைப்பில் விரைவில் இணையுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
முக்கியத்துவம் வாய்ந்தவர்களே,
கொரோனாவுக்குப் பிந்தைய நிலைத்தன்மை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இந்தியா-ஸ்வீடன் நட்புறவால், முக்கிய பங்களிப்பை செய்ய முடியும். நமது பரஸ்பர ஒத்துழைப்பை புத்தாக்கம், தொழில்நுட்பம், முதலீடு, ஸ்டார்ட்-அப்கள், ஆராய்ச்சி ஆகிய துறைகளிலும் மேலும் மேம்படுத்த முடியும். பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு பொலிவுறு நகரங்கள், நீர் சுத்திகரிப்பு, கழிவு மேலாண்மை, சுழல் பொருளாதாரம், ஸ்மார்ட் தொகுப்புகள், மின்னணு இடப்பெயர்வு, டிஜிட்டல் பரிமாற்றம் போன்ற துறைகளிலும் நல்ல வாய்ப்புகள் உள்ளன. நமது ஒத்துழைப்புக்கு புதிய பரிமாணத்தை இன்று நடைபெறும் காணொலி கருத்தரங்கு அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.
**************
(Release ID:1867666)
(Release ID: 1868432)
Visitor Counter : 178