பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கிய திட்ட அட்டைகள் விநியோகத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

Posted On: 16 OCT 2022 12:41PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத்தில் ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கிய திட்ட அட்டைகள் விநியோகத்தை அக்டோபர் 17 ஆம் தேதி மாலை 4 மணிக்கு காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

குஜராத்தின் அப்போதைய முதலவராக இருந்த பிரதமர் திரு மோடி, ஏழை மக்களை கொடிய நோய்களில் இருந்து காப்பாற்றும் நோக்கில், அவர்களின் மருத்துவ சிகிச்சை தொடர்பான செலவுகளுக்காக 2012 ஆம் ஆண்டு "முக்யமந்திரி அம்ருதம் " திட்டத்தைத் தொடங்கினார். 2014 ஆம் ஆண்டில், இந்த திட்டம் ஆண்டு வருமான வரம்பு ரூ.4 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் குடும்பங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் ‘முக்யமந்திரி அம்ருதம் வாத்சல்யா  யோஜனா’  என மறுபெயரிடப்பட்டது.

இந்த திட்டம் வெற்றியடைந்ததை அடுத்து,  2018 ஆம் ஆண்டில் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தினை பிரதமர் தொடங்கினார். இது உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வயது போன்றவற்றில் எந்த வரம்பும் இல்லாமல் ஆரம்ப, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனை பராமரிப்பு தொடர்பாக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ 5 லட்சம் வழங்கப்பட்டது.

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா தொடங்கப்பட்டதன் மூலம், குஜராத்தில் 2019 ஆம் ஆண்டு, இந்த திட்டங்களை ஒருங்கிணைத்து, பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கிய திட்டம் என்று மாற்றம் செய்யப்பட்டது.

 

பிரதமர் இந்த அட்டைகளின் விநியோகத்தை தொடங்கி வைத்த பிறகு, 50 லட்சம் வண்ணமயமான ஆயுஷ்மான் கார்டுகள் குஜராத் முழுவதும் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும், அவர்களின் வீடுகளுக்கே சென்று  வழங்கப்படும்.

 

*******

GS/SM/DHA

 


(Release ID: 1868256) Visitor Counter : 224