தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

53-வது இந்திய சர்வதேச திரைப்படவிழா ஊடக பிரதிநிதிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது

Posted On: 06 OCT 2022 1:43PM by PIB Chennai

53-வது இந்திய சர்வதேச திரைப்படவிழா ஊடக பிரதிநிதிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து  வரவேற்கிறது. கோவாவில் 2022 நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற உள்ள இந்த விழா, இந்தியாவை மற்றும் உலகம் முழுவதும் உள்ள நாடுகளைச் சேர்ந்த சிறந்த சமகால மற்றும் பழமையான திரைப்படம் காட்சிகளைக் கொண்டிருக்கும்.

இந்த விழாவில் பிரதிநிதியாக வரவிரும்புவோர் அச்சு, மின்னணு, டிஜிட்டல், இணைய ஊடகங்களை சேர்ந்தவர்களாகவும், 2022, ஜனவரி 1 அன்று 21 வயது நிறைவடைந்தவராகவும் இருக்க வேண்டும். வயது வரம்பை பூர்த்தி செய்தவர் சுதந்திர பத்திரிகையாளராக இருப்பினும், வரவேற்கப்படுவார். https://my.iffigoa.org/extranet/media/  என்ற இணைய முகவரியில் ஊடகவியலாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

இணைய இணைப்பில் ஐயமோ, வழிகாட்டுதல்களில் குறைபாடோ இருந்தால் iffi-pib[at]nic[dot]in   என்ற பத்திரிகை தகவல் அலுவலக (பிஐபி) இணைய முகவரியில் அல்லது வேலை நாட்களில், இந்திய நேரப்படி காலை பத்து மணிக்கும் மாலை ஆறு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் +91-832-2956418 என்ற செல்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.

உங்களின் விண்ணப்பத்தை இணையம் வழியாக 2022 நவம்பர் 5 அன்று (இந்திய நேரப்படி) 11:59:59-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பொது நலன் கருதியும் உங்களின் சொந்த நலன் கருதியும் கொவிட்-19-க்கு எதிராக நீங்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.  தடுப்பூசியின் ஒரு தவணையோ அல்லது அதற்கும் கூடுதலாகவோ செலுத்தியிருந்தால்  அதற்கான சான்றிதழை பிரதிநிதி பதிவுக்கான இணையப்பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விழா பற்றி அவ்வப்போது வெளியாகும் தகவல்களை  www.iffigoa.org என்ற இணையதளத்திலும், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் pib.gov.in  என்ற இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1865549

************** 

SMB/Gee/Sri



(Release ID: 1865638) Visitor Counter : 194