பிரதமர் அலுவலகம்
கேரளாவின் பாலக்காட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
06 OCT 2022 2:11PM by PIB Chennai
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி துயரம் வெளியிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்”.
“விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் கருணைத் தொகையாக வழங்கப்படும்”
**************
SMB/Gee/Sri
(வெளியீட்டு அடையாள எண்: 1865582)
வருகையாளர் எண்ணிக்கை : 180
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam