பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மும்பையின் பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு சாலையில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 05 OCT 2022 9:09AM by PIB Chennai

மும்பையின் பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு சாலையில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரதமர் பிரார்த்தனை செய்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

மும்பையின் பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு சாலையில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகுந்த துயரடைந்தேன்உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவர் என்று நம்புகிறேன்.

•••••••••••••


(रिलीज़ आईडी: 1865305) आगंतुक पटल : 190
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam