பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கான்பூரில் டிராக்டர்-டிராலி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 01 OCT 2022 10:30PM by PIB Chennai

கான்பூரில் டிராக்டர்-டிராலி இடையேயான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000மும் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

 

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் தெரிவித்தருப்பதாவது:

 

“கான்பூரில் நிகழ்ந்த டிராக்டர்-டிராலி விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். தங்கள் அன்பிற்குரியவர்களை இந்த விபத்தில் இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உள்ளூர் நிர்வாகம் செய்து வருகிறது: பிரதமர் @narendramodi”

 

 

“பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi”

 

***************


(Release ID: 1864377) Visitor Counter : 131