பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
28 SEP 2022 2:41PM by PIB Chennai
உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுமென்று அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000-மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையை பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலக ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“உத்தரப்பிரதேசத்தின் லக்கிம் கேரியில் ஏற்பட்ட விபத்தால் துயரடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடையட்டும். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும். PM @narendramodi"
**************
(Release ID: 1862904)
(रिलीज़ आईडी: 1862917)
आगंतुक पटल : 170
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam