வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம், கழிவுப் பொருட்களில் இருந்து பொம்மைகளை தயாரிக்கும் 'தூய்மை டாய்கத்தான்' போட்டியை தொடங்கியது

Posted On: 26 SEP 2022 3:33PM by PIB Chennai

பொம்மைகள் தயாரிப்பு தொழிலை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுவதற்கான பிரதமரின் அழைப்பை ஏற்று, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம், பொம்மை துறையில் இலக்கை அடைவதற்கான ஒரு அடியை எடுத்து வைத்துள்ளது. பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டத்தின்கீழ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் கழிவுகளை பொம்மைகளாக மாற்றும் புதிய யோசனைகளுக்கான தூய்மை டாய்கத்தான் போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. சேவைகள் தினமான செப்டம்பர் 17 முதல் தூய்மை தினமான அக்டோபர் 2 வரை, பதினைந்து நாட்களுக்கு அமிர்தப் பெருவிழாவின் ஒருபகுதியாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சக செயலாளர் திரு. மனோஜ் ஜோஷி, MyGov இணையபக்கத்தில், இணையதளத்தை வெளியிட்டு தூய்மை டாய்கத்தானை தொடங்கி வைத்தார். பொம்மைகளை உருவாக்குதல் அல்லது தயாரிப்பதில் கழிவுகளை பயன்படுத்துவதற்கான தீர்வுகளை ஆராய இது முயற்சி செய்கிறது.

நிகழ்ச்சியில் பேசிய திரு.மனோஜ் ஜோஷி, பொம்மைகளுக்கான தேவைகள் அதிகரித்து வரும் சூழலில், மறுபுறம் திடக்கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வுக் காண புதிய முயற்சிகளில் ஈடுபடுமாறு பொம்மை தயாரிப்பாளர்களை வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய காந்திநகர் ஐஐடியின் ஆக்கப்பூர்வமான கற்றல் மையத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்.  மணீஷ் ஜெயின், குழந்தைகளின் கற்பனை உலகில், பொம்மைகள் மகிழ்ச்சியையும், வியப்பையும் தருவதாக இருக்க வேண்டும். வீட்டிலுள்ள கழிவுப் பொருட்களை, குழந்தைகளுக்கு அறிவியலின் அடிப்படையை கற்று தரும் பொம்மைகளாக மாற்றலாம் என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862252    

                            **************

KG/SM


(Release ID: 1862273) Visitor Counter : 223