ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பை இந்திய ரயில்வே பெரிய அளவில் ஊக்கப்படுத்துகிறது

Posted On: 22 SEP 2022 11:55AM by PIB Chennai

டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பை இந்திய ரயில்வேயில் ஊக்கப்படுத்தும் வகையில், ரயில் நிலையங்களில் உள்ள  உணவு தயாரிப்பு நிறுவனங்கள் வாயிலாக உணவுப் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஊக்கப்படுத்தப்படுகிறது. மொத்தம் 8878 நிறுவனங்களில், மின்னணு  பண பரிவர்த்தனைகளுக்கான வசதிகள் உள்ளது. இதற்காக, வழங்கப்பட்ட உணவுகளின் விலையை அச்சிட்டு அளிப்பதற்கு,  கையடக்க எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 596 ரயில்களில்  3081  கையடக்க விற்பனை பதிவு எந்திரங்கள் உள்ளன.  4316 உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை பதிவு எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 ரயில்களில் பயணிகளின் வசதிக்காக, இ- கேட்ரிங் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. பயணிகள்   இ-டிக்கெட் மூலம் பயணச்சீட்டை முன் பதிவு செய்யும் போதே, அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை முன்பதிவிடலாம். அல்லது  ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் செயலி, சேவை மையம், இணையதளம் வசதியை பயன்படுத்தியோ அல்லது 1323 என்ற எண் மூலம் தொடர்பு கொண்டோ தங்களுக்கு தேவையான உணவு வகைகளை முன்பதிவு செய்யலாம். இ-கேட்ரிங் சேவை தற்போது, 310 ரயில் நிலையங்களில் உள்ளன. சராசரியாக  நாள் ஒன்றுக்கு  41,844 உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861415

**************(Release ID: 1861469) Visitor Counter : 206