பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி தமது பிறந்தநாளை பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழலை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு செலவிட்டார்.
வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்
தேச மற்றும் சர்வதேசத் தலைவர்களின் வாழ்த்துக்களுக்கும் நன்றி தெரிவித்தார்
Posted On:
17 SEP 2022 9:47PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தமது பிறந்தநாளை பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழலை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு செலவிட்டார். வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் தமது நன்றியைத் தெரிவித்தார்.
ட்விட்டரில் திரு மோடி கூறியிருப்பதாவது:
"பெற்ற அன்பால் நான் நெகிழ்ச்சியடைந்தேன். எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாழ்த்துகள் இன்னும் கடினமாக உழைக்க எனக்கு பலம் தருகிறது. இந்த நாளை பல்வேறு சமூக சேவை முயற்சிகளுக்காக அர்ப்பணித்த அனைவரையும் நான் பாராட்டுகிறேன். அவர்களின் உறுதி பாராட்டுக்குரியது” .
“நமது பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழலை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் நான் அன்றைய தினத்தை செலவிட்டேன். இந்த ஆர்வத்துடன் நாம் கூட்டாகச் செயல்படும்போது, நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற நமது இலக்கை நிறைவேற்றுவோம் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். இனிவரும் காலங்களில் நாம் மேலும் மேலும் கடினமாக உழைப்போம்.”
பிரதமரின் பிறந்த நாளில் சர்வதேசத் தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
வாழ்த்து தெரிவித்த சர்வதேச தலைவர்களான டொமினிக்கா காமன்வெல்த்தின் பிரதமர் மேன்மைதங்கிய ரூஸ்வெல்ட் ஸ்கிரீட் , நேபாள பிரதமர் மேன்மைதங்கிய ஷேர் பகதூர் தூபா, மொரிஷியஸ் பிரதமர் மேன்மைதங்கிய பிரவீன் குமார் ஜுகன்நாத், பூட்டான் பிரதமர் ஆகியோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பதிவுகளில் நன்றி தெரிவித்தார்.
மேலும் தேசத் தலைவர்களான குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு ஆகியோரின் வாழ்த்துக்களுக்கும் பிரதமர் ட்விட்டர் பதிவுகளில் நன்றி தெரிவித்துள்ளார்
******
(Release ID: 1860346)
Visitor Counter : 137
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam