தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘அம்பேத்கரும் மோடியும்: சீர்திருத்தவாதியின் சிந்தனைகளும் செயற்பாட்டாளரின் அமலாக்கமும்’ என்ற நூலினை முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வெளியிட்டார்

Posted On: 16 SEP 2022 4:23PM by PIB Chennai

‘அம்பேத்கரும் மோடியும்: சீர்திருத்தவாதியின் சிந்தனைகளும் செயற்பாட்டாளரின் அமலாக்கமும்’ என்ற நூலினை மத்திய தகவல் ஒலிபரப்புத்  துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு கே ஜி பாலகிருஷ்ணன், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் இயக்குநர் திரு ஹித்தேஷ் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய திரு அனுராக் தாக்கூர், இந்த நூல் மாபெரும் சீர்திருத்தவாதியான பாபா சாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் சிறந்த சிந்தனைகள், கண்ணோட்டங்களின் தொகுப்பு மட்டுமல்ல, இவற்றை கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி எவ்வாறு செயல்படுத்தினார் என்பதற்கான தொகுப்பாகவும் உள்ளது என்றார். டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட மாபெரும் முயற்சிகளில் ஆவணமாக இது உள்ளது.

நாட்டின் முதலாவது சட்டத்துறை அமைச்சரான டாக்டர் அம்பேத்கர், பாகுபாடு இல்லாத சமூகத்தை, நலிந்தவர்களை மைய நீரோட்டத்திற்கு கொண்டுவருவதை வளர்ச்சியின் பயன்கள் சமமாக அனைவருக்கும் வழங்கப்படுவதை தமது பார்வையாக கொண்டிருந்தார்.  ஆனால், சுதந்திரத்திற்கு பிந்தைய அரசுகளின் முயற்சிகள், இந்த சிந்தனைகளை நிறைவேற்ற தவறிவிட்டன. 2014-க்கு பிறகான அரசு இந்த நோக்கங்களை உறுதியாக பின்பற்றி வருகிறது என்று திரு தாக்கூர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், பாபா சாஹேபின் பங்களிப்புகள் வங்கி, பாசனம், மின்சாரம், கல்வி, தொழிலாளர் நிர்வாகம், வருவாய் பகிர்வு முறை போன்றவை தொடர்பான கொள்கைகளை வடிவமைக்க உதவின என்றார்.

2010-ம் ஆண்டு குஜராத்தில் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி கவுரவ யாத்திரைக்கு ஏற்பாடு செய்ததை நினைவு கூர்ந்த திரு கோவிந்த், இந்திய அரசியல் சட்டத்தின் மிகப்பெரிய பிரதி ஒன்றை அலங்கரிக்கப்பட்ட யானையின் மேல் வைத்து முதலமைச்சர் மோடி மக்களுடன்  நடந்தே சென்றார். அரசியல் சட்டத்தின் மீதும், பாபா சாஹேப் அம்பேத்கர் மீதும் அவருக்கு இருந்த மதிப்பை விளக்குவதற்கு வேறு உதாரணம் தேவையில்லை என்று குறிப்பிட்டார்.

நூலைப் பற்றி

சமூக நலனுக்காக சிறந்த சிந்தனைகள் குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அமலாக்கம் செய்யவும், இந்தியர்களின் திறமையையும் இந்திய சமூகத்திற்கு அதிகாரம் அளிப்பவர்களையும் இணைக்கின்ற பணியை செய்கின்ற முன்னணி அமைப்புகளில் ஒன்றான ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் இந்த நூலினை கவனமாகவும், சிறப்பாகவும் தொகுத்துள்ளது.  இதற்கு பிரபல இசையமைப்பாளரும் திரைப்பட பாடலாசிரியருமான நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா முன்னுரை வழங்கியுள்ளார். டாக்டர் அம்பேத்கரின் பணிகளில் காணப்படும் பரவலான மதிப்புமிகு ஞானத்தை இந்த முன்னுரை வெளிப்படுத்துகிறது.  மேலும் டாக்டர் அம்பேத்கரின் பார்வையில், இந்தியாவின் முன்னேற்றத்தை உறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோடியால் மேற்கொள்ளப்படும்  சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளையும் இணைத்துப் பார்க்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1859839

********


(Release ID: 1859888) Visitor Counter : 234