நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2021-22 குறித்த 28-வது நிலைமை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 05 SEP 2022 4:08PM by PIB Chennai

நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் வெளிநாட்டு கடன் நிர்வாகப் பிரிவு இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2021-22 குறித்த 28-வது நிலைமை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2021 மார்ச் இறுதியில், 573.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் வெளிநாட்டுக்கடன், 2022 மார்ச் இறுதியில் 8.2 சதவீதம் அதிகரித்து 620.7 பில்லியன் அமெரிக்கன் டாலர் ஆகியுள்ளது.

உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதத்தில் வெளிநாட்டுக்கடன் அளவு ஓராண்டுக்கு முன் 21.2 சதவீதம் என்பதிலிருந்து கணிசமாக குறைந்து 2022 மார்ச் இறுதியில், 19.9 சதவீதம் ஆகியுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு, விகிதத்தில்  ஓராண்டுக்கு முன் 100.6 சதவீதம் என்பதை விட, 2022 மார்ச் இறுதியில் 97.8 சதவீதம் என வெளிநாட்டுக்கடன்  லேசாக குறைந்துள்ளது.

நீண்டகால கடன் அளவு 499. 1 பில்லியன் அமெரிக்கன் டாலர் என்றும், குறுகிய காலக்கடன் அளவு 121.7 பில்லியன் அமெரிக்கன் டாலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு மொத்தக்கடனில் 90 சதவீதம் வணிகக்கடன்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்புத்தொகைகள் குறைந்தகால வர்த்தகக்கடன், பலவகை கடன்கள் ஆகியவையாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1856834

**************


(வெளியீட்டு அடையாள எண்: 1856846) வருகையாளர் எண்ணிக்கை : 4224
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati