பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
செப்டம்பர் 1- 30 வரை 5-வது தேசிய ஊட்டச்சத்து மாதம், 2022ஐ கொண்டாடுகிறது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம்
Posted On:
31 AUG 2022 10:17PM by PIB Chennai
ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு என்ற சவாலை வேகமாக எதிர்கொள்வதற்காக பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் முன்னோடித் திட்டம் தான் ஊட்டச்சத்து திட்டம். இத்திட்டத்தின் மையக் கருவில் கவனம் செலுத்தி ஊட்டச்சத்து உள்ளடக்கம், விநியோகம் மற்றும் விளைவுகளை வலுப்படுத்த ஒருங்கிணைந்த திட்டமாக ஊட்டச்சத்து இயக்கம் 2.0 திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 முதல் 30-ஆம் தேதி வரை 5-வது தேசிய ஊட்டச்சத்து மாதம் 2022-ஐ மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் கொண்டாடுகிறது. பெண்களும், ஆரோக்கியமும் மற்றும் குழந்தையும், கல்வியும் என்பதில் அதிக கவனம் செலுத்தி கிராம பஞ்சாயத்துகள் வாயிலாக ஊட்டச்சத்து மாதத்தை ஊட்டச்சத்து பஞ்சாயத்துகளாக செயல்படுத்துவது இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் நோக்கமாகும்.
‘ஆரோக்கியமான இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையைப் பூர்த்தி செய்வதற்காக கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பெண்களிடையே சிறப்பு கவனம் செலுத்தி ஊட்டச்சத்து குறித்து அடிமட்ட அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒரு மாத காலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அங்கன்வாடி சேவைகள், ஆரோக்கியமான நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பாரம்பரிய ஊட்டச்சத்து மிக்க உணவுகள் நிறைந்த ‘பாட்டியின் சமையற்கூடம்’ என்ற நிகழ்ச்சி, மழைநீர் சேகரிப்பிற்கு முக்கியத்துவம், ஊட்டச்சத்துமிக்க தோட்டங்களை கண்டறிதல் போன்ற ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855878
**************
(Release ID: 1856836)
Visitor Counter : 968