நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளில் வெப்பநிலை இல்லாமல் நிகர அளவை குறிப்பிடும்படி உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Posted On: 25 AUG 2022 11:55AM by PIB Chennai

சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் / பாக்கெட்டுகளில் அடைப்பவர்கள் / இறக்குமதியாளர்கள், சமையல் எண்ணெய் போன்றவற்றின் நிகர அளவை அறிவிக்குமாறு மத்திய அரசு  அறிவுறுத்தியுள்ளது. வெப்பநிலையைக் குறிப்பிடாமல் எடை அலகுகளில் நிகர அளவை  ஆறு மாதங்களுக்குள் அதாவது. ஜனவரி 15, 2023 வரை அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சமையல் எண்ணெய், வனஸ்பதி, நெய் போன்றவற்றின் நிகர அளவு அல்லது . எடை  அறிவிக்கப்பட வேண்டும். அளவாக அறிவிக்கப்பட்டால், பண்டத்தின் சமமான எடையை கட்டாயமாக அறிவிக்க வேண்டும். தொழிற்சாலைகள் நிகர அளவின் அளவை அறிவிக்கும் போது வெப்பநிலையை முன்கூட்டியே குறிப்பிடுவது அவதானிக்கப்பட்டது.

சமையல் எண்ணெயின் எடை வெவ்வேறு வெப்பநிலைகளில் மாறக்கூடியது என்பதால்,  வாங்கும் போது நுகர்வோர் சரியான அளவைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள்/ பேக்கர்கள்/ இறக்குமதியாளர்கள் போன்றவர்கள். குறிப்பிட்ட தயாரிப்புகளை வெப்பநிலை குறிப்பிடாமல் பேக் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1854288 

***************



(Release ID: 1854322) Visitor Counter : 204