நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளவும், உதிரியாக விற்பனை செய்யப்படும் ஆடை அல்லது பின்னப்பட்ட ஆடைகளின் சுமையைக் குறைக்கவும் சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) விதிகள் 2011-இல் மத்திய அரசு திருத்தம்

Posted On: 25 AUG 2022 11:56AM by PIB Chennai

உதிரியாக விற்பனை செய்யப்படும் ஆடை அல்லது பின்னப்பட்ட ஆடைகளுக்கு சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) விதிகள் 2011-லிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளிலிருந்து மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நுகர்வோர் விவகாரங்கள் துறைக்கு கோரிக்கைகள் அளிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளவும், உதிரியாக விற்பனை செய்யப்படும் ஆடை அல்லது பின்னப்பட்ட ஆடைகளின் சுமையைக் குறைக்கவும், சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) (மூன்றாவது திருத்தம்) விதிகள் 2022- இன் வாயிலாக கீழ்காணும் தகவல்களை வெளியிடுவதிலிருந்து இந்தப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது:

i.     பொருளின் பொதுவான/ பொதுப் பெயர்

ii.     எடை அல்லது மீட்டரின் அலகு அல்லது தொகுப்பில் உள்ள பொருட்களின் எண்ணிக்கையின் நிகர அளவு

iii.    அலகின் விற்பனை விலை

iv.    தயாரிக்கப்பட்ட அல்லது முன்கூட்டியே அட்டையில் அடைக்கப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்ட மாதம் மற்றும் வருடம்

v.     காலப்போக்கில் மனிதர்களின் பயன்பாட்டிற்கு தகுதியற்றதாக மாறும் பொருட்களுக்கு, பயன்படுத்துவதற்கு உகந்த தேதி, மாதம் மற்றும் ஆண்டு

vi.    நுகர்வோர் தொடர்புகொள்ள வேண்டிய பெயர் மற்றும் முகவரி

தயாரிப்பாளர்/ விற்பனையாளர்/ நிறுவன உரிமையாளர்/ இறக்குமதி செய்யப்பட்ட நாட்டின் பெயருடன் இறக்குமதியாளர்/ தயாரிப்பாளரின் பெயர், நுகர்வோர் தொடர்புக்கான மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அலகுகளின் அளவுகள், அதிகபட்ச சில்லறை விலை ஆகிய நுகர்வோருக்கு சம்பந்தமான தகவல்கள் மட்டுமே இனி இடம்பெற்றிருந்தால் போதுமானது

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலத்தில் செய்திகுறிப்பைக் காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1854289

***************



(Release ID: 1854321) Visitor Counter : 220