அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய காற்றின் சுவாசம்

Posted On: 22 AUG 2022 4:18PM by PIB Chennai

புதுதில்லியை சேர்ந்த புதிய தொழில் நிறுவனம் தயாரித்துள்ள, மாசு எதிர்ப்பு தலைக்கவசம், இருசக்கர வாகன ஓட்டிகள் தூய்மையான காற்றை சுவாசிக்க உதவுகிறது. ஷெல்லியோஸ் டெக்னோலேப்ஸ் தயாரித்துள்ள இந்த தலைக்கவசத்தில், புளூடூத்துடன் இணைக்கப்பட்ட செயலி உள்ளது. இந்த செயலி, தலைக்கவசத்தை எப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்ற தகவலை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் தொடக்க நிதியை பெற்று, நொய்டாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்முனைவோர் தொழில்நுட்பப் பூங்காவில் தொடங்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம் தயாரிப்பதில் முன்னணியிலுள்ள நிறுவனங்களுடன், வணிக அடிப்படையிலான ஒப்பந்தங்களில், இந்த புதிய தொழில் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

குளிர்காலங்களில் புதுதில்லியில் ஏற்படும் காற்று மாசுவால், இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உணர்ந்து, இந்த தலைக்கவசங்களை ஷெல்லியோஸ் டெக்னோலேப்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853604

                                                                                                                                   ***************

 



(Release ID: 1853629) Visitor Counter : 187