உள்துறை அமைச்சகம்

தேசிய விருதுகளுக்காக தொடங்கப்பட்டுள்ள இணையப்பக்கத்தில் பல்வேறு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Posted On: 22 AUG 2022 12:28PM by PIB Chennai

வெளிப்படை தன்மையையும், பொதுமக்களின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்காக  ஒரே தளத்தின் கீழ் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், முகமைகளின் அனைத்து விருதுகளையும் ஒருங்கிணைத்து கொண்டு வர பொதுவாக தேசிய விருது இணையப்பக்கம் (https://awards.gov.in) மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விருதுகளுக்கு தனிநபர்களை அல்லது நிறுவனங்களை பரிந்துரை செய்யும் குடிமக்கள் அல்லது அமைப்புகளுக்கு இந்த இணையப்பக்கம் வசதி செய்கிறது.

 தற்போது கீழ்காணும்  விருதுகளுக்கு விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

 1. பத்ம விருதுகள் - கடைசி தேதி 15.09.2022
 2. வன வளத்தில் சிறப்பாக செயல்பட்டோருக்கான தேசிய விருது 2022- கடைசி தேதி 30.09.2022
 3. தேசிய கோபால் ரத்னா விருது 2022 - கடைசி தேதி 15.09.2022
 4. தேசிய தண்ணீர் விருதுகள் 2022- கடைசி தேதி 15.09.2022
 5. மூத்த குடிமக்களுக்கான தேசிய விருது 2022- கடைசி தேதி 29.08.2022
 6. தனிநபர் சிறப்பு செயல்பாட்டுக்கான தேசிய விருது 2021- கடைசி தேதி 28.08.2022
 7. தனிநபர் சிறப்பு செயல்பாட்டுக்கான தேசிய விருது 2022- கடைசி தேதி 28.08.2022
 8. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் ஈடுபாடு கொண்டுள்ள நிறுவனங்களுக்கான தேசிய விருது 2021 - கடைசி தேதி 28.08.2022
 9. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் ஈடுபாடு கொண்டுள்ள நிறுவனங்களுக்கான தேசிய விருது 2022 - கடைசி தேதி 28.08.2022
 10. தேசிய சிஎஸ்ஆர் விருதுகள் 2022- கடைசி தேதி 31.08.2022
 11. நாரி சக்தி விருது 2023- கடைசி தேதி 31.10.2022
 12. சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை விருது 2023- கடைசி தேதி 31.08.2022
 13. மது மற்றும் போதைப்பொருள் தடுப்பு துறையில் சிறந்த சேவைக்கான தேசிய விருது 2022 - கடைசி தேதி 29.08.2022
 14. ஜீவன் ரக்ஷா பதக்கம் - கடைசி தேதி 30.09.2022

மேலும் விவரங்களுக்கும், விண்ணப்பம் செய்வதற்கும் தேசிய விருதுகள் இணையதளத்தை (https://awards.gov.in) காணவும்

**************

(Release ID: 1853527)(Release ID: 1853595) Visitor Counter : 225