பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் ஆகஸ்ட் 24ம் தேதி ஹரியானா மற்றும் பஞ்சாப் செல்லவுள்ளார்

ஃபரிதாபாதில் அம்ரிதா மருத்துவமனையை திறந்து வைக்கிறார்

புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை மூலம் தலைநகர பிராந்தியத்தில் நவீன மருத்துவ கட்டமைப்பு வலுவடையும்

சாஹிப்சதா அஜித் சிங் நகர் மாவட்டத்தில் (மொஹாலி) ஹோமிபாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்

இந்த மருத்துவமனையால் பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில் வசிப்பவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய்க்கான சிகிச்சை கிடைக்கும்

Posted On: 22 AUG 2022 1:38PM by PIB Chennai

 பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 24ம் தேதி ஹரியானா மற்றும் பஞ்சாப் செல்லவுள்ளார். அங்கு இரண்டு முக்கிய மருத்துவ கட்டமைப்புகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்ட உள்ளார்.  பகல் 11 மணியளவில் ஹரியானாவில் உள்ள ஃபரிதாபாதில் அம்ரிதா மருத்துவமனையை திறந்து வைக்கிறார். அதன் பிறகு மொஹாலி செல்லும் பிரதமர், பிற்பகல் 2.15 மணியளவில் சாஹிப்சதா அஜித் சிங் நகர் மாவட்டத்தில் (மொஹாலி), புதுசண்டிகரில் உள்ள முல்லன்பூரில் கட்டப்பட்டுள்ள ஹோமிபாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.

 ஹரியானாவில் பிரதமர்:

ஃபரிதாபாதில் அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் தொடங்கிவைப்பதன் மூலம், தலைநகர் பிராந்தியத்தில் நவீன மருத்துவ கட்டமைப்பு வலுவடையும். மாதா அமிர்தனந்தமயி நிர்வகிக்கும் இந்த பன்னோக்கு அதிநவீன சிறப்பு மருத்துவமனையில் 2500 படுக்கை வசதிகள் உள்ளன. சுமார் 6 ஆயி்ரம் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையால் ஃபரிதாபாத் மற்றும் தலைநகர் பிராந்தியத்தை சுற்றிவசிக்கும் மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும்.

பஞ்சாப்பில் பிரதமர்:

  சாஹிப்சதா அஜித் சிங் நகர் மாவட்டத்தில் (மொஹாலி), புதுசண்டிகரில் உள்ள முல்லன்பூரில் கட்டப்பட்டுள்ள ஹோமிபாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.

இந்த மருத்துவமனையால் பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில்  வசிப்பவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய்க்கான சிகிச்சை கிடைக்கும்.

 மத்திய அரசு அணு எரிசக்தித்துறை உதவியுடன் டாடா நினைவு மையத்தின் ரூ.660 கோடி நிதியுதவியால் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

 300 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த புற்றுநோய் மருத்துவமனையின் அனைத்துவிதமான புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோய், கீமோதெரபி, நோய் எதிர்ப்பு சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன.

 சங்ரூரில் உள்ள 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை சிறப்பாக செயல்படுவது போல், இப்பகுதியில் புற்றுநோய் சிகிச்சைக்கான கேந்திரமாக இந்த மருத்துவமனை சிகிச்சையின் மருத்துவமனை செயல்படும்.

***************

(Release ID: 1853546)


(Release ID: 1853585) Visitor Counter : 240