பிரதமர் அலுவலகம்

76- வது சுதந்திர தினத்தன்று வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி

Posted On: 15 AUG 2022 9:45PM by PIB Chennai

76-வது சுதந்திர தினத்தன்று வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா பிரதமரின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர், “பிரதமர் திரு அந்தோனி அல்பனீஸ் அவர்களே, உங்களது சுதந்திர தின வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நட்புறவு சவாலான தருணங்களிலும் நிலைத்து நின்று இருநாட்டு மக்களுக்கு பெரிதும் உதவியுள்ளது”, என்று கூறினார்.

மாலத்தீவுகள் அதிபர் ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்திக்கு பதிலளித்த பிரதமர், “அதிபர் திரு இப்ராஹிம் முகமது சோலிஹ் அவர்களே, எங்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி. வேகமாக வளர்ந்து வரும் இந்திய- மாலத்தீவுகள் இடையேயான நட்புறவு பற்றி நீங்கள் தெரிவித்திருந்த இனமான வார்த்தைகளை நான் வழிமொழிகிறேன்”, என்று தெரிவித்தார்.

பிரான்ஸ் அதிபரின் வாழ்த்துக்கு பதிலளித்த பிரதமர் கூறியதாவது:

“அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரான் அவர்களே, உங்களது சுதந்திர தின வாழ்த்துகள், மிகவும் நெகிழச் செய்தது. பிரான்ஸ் உடனான நெருக்கமான உறவை இந்தியா முழு மனதோடு ஆதரிக்கிறது. உலக நன்மைக்கான இருதரப்பு கூட்டணி, அது.”

பூட்டான் அதிபரின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்த பிரதமர் தெரிவித்ததாவது

“பூட்டான் அதிபர் திரு லாட்டே ட்ஷெரிங் அவர்களின் சுதந்திர தின வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். அண்டை நாடாகவும், மதிப்புமிக்க நட்பு நாடாகவும் உள்ள பூட்டானுடனான சிறப்பு உறவை இந்தியர்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள்.”

டொமினிக்கா நாட்டு பிரதமரின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்த பிரதமர், “எங்கள் சுதந்திர தினத்தன்று வாழ்த்து தெரிவித்தமைக்காக பிரதமர் திரு ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் அவர்களுக்கு நன்றி. இந்தியா- டொமினிகா இடையேயான இருதரப்பு உறவுகள் வரும் ஆண்டுகளில் மேலும் தொடர்ந்து வளர்ச்சி பெறட்டும்”, என்று கூறினார்.

மொரிசியஸ் பிரதமரின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்து பிரதமர் தெரிவித்திருப்பதாவது:

“பிரதமர் திரு பிரவீந்த் குமார் ஜக்நாத் அவர்களே, உங்களிடமிருந்து சுதந்திர தின வாழ்த்து கிடைப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. இந்தியாவுக்கும் மொரிசியஸுக்கும் இடையே ஆழமான கலாச்சார தொடர்புகள் உள்ளன. நம் நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக பல்வேறு பிரிவுகளில் நாம் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றோம்.”

மடகாஸ்கர் அதிபரின் வாழ்த்து செய்திக்கு பதிலளித்துள்ள பிரதமர், “எங்கள் சுதந்திர தினத்தன்று வாழ்த்து தெரிவித்தமைக்காக அதிபர் திரு ஆன்றி ரஜோலினா அவர்களுக்கு நன்றி. நம் மக்களின் நலனுக்காக நம்பிக்கைக்குரிய வளர்ச்சிக்கான கூட்டாளியாக மடகஸ்கர் நாட்டுடன் இந்தியா எப்போதும் இணைந்து பணியாற்றும்”, என்று தெரிவித்தார்.

நேபாள பிரதமரின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்த பிரதமர், “பிரதமர்  திரு ஷேர் பஹதுர் தீயோபா அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. இந்திய- நேபாள நட்புறவு வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வலுப்பெறட்டும்”, என்று கூறினார்.

ஜெர்மனி நாட்டின் பிரதமர் விடுத்துள்ள ட்விட்டர் செய்திக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியதாவது:

“சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் திரு ஸ்கோல்ஸ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவும் ஜெர்மனியும் முக்கிய கூட்டாளிகளாக இருப்பதோடு, நமது பல அம்சங்கள் வாய்ந்த ஒத்துழைப்பு துடிப்பானதாகவும் நம் மக்களுக்கு பரஸ்பர பயனளிப்பதாகவும் உள்ளது.”

ஜிம்பாப்வே அதிபரின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்து, பிரதமர் தெரிவித்திருப்பதாவது:

“வாழ்த்து தெரிவித்த அதிபர் திரு எமர்சன் டாம்பட்ஸோ நான்கக்வா அவர்களுக்கு நன்றி. நமது நாட்டு குடிமக்களின் நலனுக்காக இந்தியா, ஜிம்பாவே இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதன் அவசியம் பற்றி அவர் கூறியிருந்த கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன்.”

***************



(Release ID: 1852468) Visitor Counter : 183