பிரதமர் அலுவலகம்
இல்லந்தோறும் மூவர்ண கொடியேற்றும் இயக்கத்தின் உணர்வின் பார்வையை நாடு முழுவதிலும் இருந்து பிரதமர் பகிர்வு
Posted On:
12 AUG 2022 9:06PM by PIB Chennai
இல்லந்தோறும் மூவர்ணக் கொடியேற்றும் இயக்கத்தில் மக்களின் ஆர்வம் பற்றி நாடு முழுவதிலும் இருந்து சில நிகழ்வுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
ட்விட்டரில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“கண்ணைக் கவரும் காட்சி! நீர், நிலம் மற்றும் ஆகாயத்தில் மூவர்ணங்கள் பரவியிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. #HarGharTiranga”
“இத்தகைய உணர்வுக்கு மிக்க நன்றி. மூவர்ணங்களின் மீது இது போன்ற இணையற்ற மரியாதையை காண்பிப்பது இந்தியர்களின் ஆர்வம் மற்றும் உற்சாகத்தை எடுத்துரைக்கிறது. #HarGharTiranga”
“அருமை! எதிர்கால இந்தியாவின் தலைவர்கள் நிறைந்த இது போன்ற மூவர்ண பயணங்கள், அனைவரிடமும் தேசப்பற்று உணர்வை ஊட்டும். #HarGharTiranga”
“விசாகப்பட்டின மக்களின் அபாரமான கூட்டு முயற்சி, இது. இல்லந்தோறும் மூவர்ண கொடியேற்றும் இயக்கத்தை #HarGharTiranga நோக்கிய ஆர்வத்தைக் கண்டு வியக்கிறேன்.”
“இல்லந்தோறும் மூவர்ண கொடியேற்றும் இயக்கத்தின் #HarGharTiranga உணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில் லடாக்கில் இது ஓர் அற்புதமான முயற்சி.”
************
(Release ID: 1851464)
Visitor Counter : 168
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam