பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சவுரவ் கோஷல், தீபிகா பல்லிகல்லுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2022 11:27PM by PIB Chennai

பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள், 2022-இல் கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சவுரவ் கோஷல் மற்றும் தீபிகா பல்லிகல்லுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் பிரதமர்  தெரிவித்ததாவது:

“காமன்வெல்த் போட்டிகளின் பல்வேறு விளையாட்டுகளில் நமது தடகள வீரர்கள் அபாரமாக விளையாடுவதைப் பார்ப்பது பேரின்பம் அளிக்கிறது. கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சவுரவ் கோஷல், @SauravGhosal, தீபிகா பல்லிகல்லுக்கு @DipikaPallikal வாழ்த்துகள். தலைசிறந்த திறமையையும், குழு செயல்பாட்டையும் அவர்கள் வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு நல்வாழ்த்துகள். #Cheer4India”

***************

(Release ID: 1849592)


(வெளியீட்டு அடையாள எண்: 1849671) வருகையாளர் எண்ணிக்கை : 151