பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதற்குப் பிரதமர் பெருமிதம்

Posted On: 07 AUG 2022 5:23PM by PIB Chennai

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதையடுத்து, பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

ஹாக்கியுடன் இந்தியாவுக்கு சிறப்பான உறவு உள்ளது. எனவே, ஒவ்வொரு இந்தியனும் வெண்கலப் பதக்கத்தை வென்றதற்காக நமது மகத்தான மகளிர் ஹாக்கி அணியைப் பற்றி பெருமைப்படுவது உறுதி. பல ஆண்டுகளில் பெண்கள் அணி காமன்வெல்த் பதக்க மேடையில் நின்றது இதுவே முதல் முறை. அணியை எண்ணி பெருமை கொள்வோம்! #Cheer4India"

•••••••••••••

 


(Release ID: 1849484)