பிரதமர் அலுவலகம்
குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற ரோஹித் டோகாசிற்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2022 8:23AM by PIB Chennai
பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் ஆடவருக்கான 67 கிலோ குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற ரோஹித் டோகாசிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“ரோஹித் டோகாசின் சாதனையால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது கடின உழைப்பும், விடாமுயற்சியும், சிறந்த பலன்களை வழங்கியுள்ளன. எதிர்வரும் காலங்களில் மேலும் பல வெற்றிகளை அவர் அடைவார் என்று நம்புகிறேன். #Cheer4India”
•••••••••••••
(வெளியீட்டு அடையாள எண்: 1849296)
வருகையாளர் எண்ணிக்கை : 163
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam