பிரதமர் அலுவலகம்
பர்மிங்காம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் 68 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை திவ்யாவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இடுகை இடப்பட்ட நாள்:
06 AUG 2022 12:15AM by PIB Chennai
பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022-ல் மகளிருக்கான 68 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை திவ்யாவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
"இந்தியாவின் மல்யுத்த வீரர்கள் மிகச்சிறந்தவர்கள், இது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தெளிவாக பிரதிபலிக்கிறது. திவ்யா @DivyaWrestler வெண்கலம் வென்றதற்காகப் பெருமைப்படுகிறேன். இந்த சாதனை வரும் தலைமுறைகளால் போற்றப்படும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்."
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1849047)
வருகையாளர் எண்ணிக்கை : 228
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam