பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜூலையில் 6 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகளுக்காக பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

Posted On: 02 AUG 2022 10:44AM by PIB Chennai

2016-க்கு பின் முன்னெப்போதும் இல்லாத உயர் அளவாக ஜூலையில் மிகச்சிறந்த சாதனையாக 6 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்திருப்பதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார் .

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;

“இது மிகப்பெரிய சாதனையாகும். புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுகொள்வதிலும், பொருளாதாரத்தை சீராக்குவதிலும் இந்திய மக்களின் கூட்டான முடிவை இது காட்டுகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் குறிப்பாக கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உதவியாக இருந்தது.”

***************

(Release ID: 1847228)


(Release ID: 1847284) Visitor Counter : 242