பிரதமர் அலுவலகம்
17 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக பங்களிப்பு செய்த இந்திய மல்யுத்த அணிக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
01 AUG 2022 6:44PM by PIB Chennai
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக பங்களிப்பு செய்த இந்திய மல்யுத்த அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 7 தங்கப்பதக்கம் (இதில் 5 பதக்கத்தை மகளிர் வென்றனர்) மற்றும் 32 வருடங்களுக்கு பிறகு கிரேக்க ரோமன் பிரிவில் ஒரு தங்கப்பதக்கம் என 14 பதக்கங்களுடன் இதுவரை இல்லாத அளவில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சிறந்த பங்களிப்பை செய்துள்ளது என்று கூறியுள்ளார். அத்துடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றதாகவும், நமது அணியினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
----
(வெளியீட்டு அடையாள எண்: 1847112)
வருகையாளர் எண்ணிக்கை : 172
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam