உள்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        மத்திய ரிசர்வ் காவல் படையின் நிறுவன தினத்தையொட்டி அப்படையினருக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அமித் ஷா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                27 JUL 2022 12:24PM by PIB Chennai
                
                
                
                
                
                
                மத்திய ரிசர்வ் காவல் படையின் நிறுவன தினத்தையொட்டி அப்படையினருக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அமித் ஷா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாட்டின் பாதுகாப்பிற்காக தனித்துவமான பங்களிப்பை மட்டும் மேற்கொள்ளாமல் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படும் வகையில் துணிச்சலான வரலாற்றை மத்திய ரிசர்வ் காவல் படையினர் ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். இந்நாளையொட்டி நாட்டிற்காக அவர்கள் ஆற்றும் சேவை மற்றும் அர்ப்பணிப்பிற்காக இப்படை வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
1939 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள் மன்னர் பிரதிநிதித்துவ காவல் படையால் உருவாக்கப்பட்ட சிஆர்பிஎஃப் சுதந்திரத்திற்குப் பிறகு 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்திற்குப் பிறகு மத்திய ரிசர்வ் காவல் படை என பெயரிடப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1845251
***************
                
                
                
                
                
                (Release ID: 1845337)
                Visitor Counter : 271