ரெயில்வே அமைச்சகம்
சுதந்திரதின ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கொண்டாட்டங்கள் ஜூலை 23 2022 அன்று நிறைவடையும்
प्रविष्टि तिथि:
21 JUL 2022 1:09PM by PIB Chennai
ஜூலை 23 2022 அன்று, 'சுதந்திரதின ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ' சிறப்பு வார கொண்டாட்டங்களின் நிறைவு விழாவுக்கு இந்திய ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரயில்வே துறை அமைச்சர் திரு.அஷ்விணி வைஷ்ணவ் கலந்து கொள்கிறார். அப்போது, சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடவுள்ளார்.
சுதந்திரதின அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, இந்திய ரயில்வே ஜூலை 18 முதல் 23 வரை சுதந்திரதின ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஒருவார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வின்போது, சுதந்திர போராட்டங்களில் தொடர்புடைய 75 ரயில் நிலையங்கள் மற்றும் 27 ரயில்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது.
அனைத்து மண்டலங்கள்/பிரிவுகளில் உள்ள ரயில் நிலையங்கள், அவைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரயில் நிலையங்கள் மூலம் (சுதந்திர போரில் தொடர்புடைய 75 ரயில் நிலையங்களும்) நிறைவு விழாவில் காணொலி வாயிலாக இணைக்கப்படும். பொதுமேலாளர்களும் காணொலி மூலம் நிகழ்வில் கலந்து கொள்வார்கள். இதுகுறித்து, ஏற்கனவே அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்த விழா அனைத்து மண்டலங்கள்/பிரிவுகளிலும், அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரயில் நிலையங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
***************
Release ID: 1843358
(रिलीज़ आईडी: 1843475)
आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
हिन्दी
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Urdu
,
Kannada
,
Assamese
,
Telugu
,
Malayalam